படைப்புகளை வைத்து தான் சாதனை நிகழ்த்த வேண்டும் என்றில்லை. படைப்புகளை பார்த்து கூட சாதனைகள்  நிகழ்த்தலாம் என நிரூபித்துள்ளார் சினிமா ரசிகர் ஒருவர். படங்களுக்கு விருது கிடைக்குமா? படத்தில் பணியாற்றியவர்களுக்கு விருது கிடைக்குமா? என திரையுலகம் ஏங்கிக் கொண்டிருக்கும்  இந்த வேளையில் சினிமாவை பார்த்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் தீவிர சினிமா ரசிகரான ராமிரோ அலனிஸ்.

பொதுவாகவே ‛மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ்’ தயாரிப்புகளுக்கு எப்போதும் உலக அளவில் ரசிக பட்டாளம் உண்டு. அவர்களின் அவெஞ்சர்ஸ் படைப்புகளுக்கு பிரத்யேக ரசிகர்கள் இருப்பதை உறுதி செய்திருக்கிறது இறுதியாக  வந்த ‛அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம். அவெஞ்சர்ஸ் படைப்புகளின் தீவிர ரசிகரான ராமிரோ அலனிஸ் என்பவர் , எண்ட் கேம் திரைப்படத்தை 191 முறை திரையரங்கில் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

I’m Officially Amazing!!!

A @GWR Title Holder for “The Most Cinema Productions Attended - Same Film”
With 191 times seen #AvengersEndgame .#Marvel @Russo_Brothers #TigreVengador @ChrisEvans @Kevfeige @RobertDowneyJr @MarkRuffalo @karengillan @jimmyfallon #Tigres @CinePREMIERE https://t.co/FxdA6Fh7Vt pic.twitter.com/ZgRNg517SK
— Agustin Alanis (@agalanis17) March 17, 2021

இதற்கு முன்பாக ‛அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி’ திரைப்படத்தை 100 முறை பார்த்த நெம்ப்ராப்ஸ் என்பவர் தான் அதிக முறை படம் பார்த்த சாதனையை படைத்திருந்தார். அதை முறியடித்துள்ள ராமிரோ அலனிஸ், அதற்கான கின்னஸ்  விருதை கடந்த மார்ச் 17ல் வாங்கியுள்ளார். தனது சமூக வளைதளத்தில் அந்த தகவலை பகிர்ந்துள்ள அவர், படத்தின் கதாபாத்திரங்களுடன் தான் எடுத்த புகைப்படங்களையும் அத்துடன் பகிர்ந்துள்ளார். அதுவே தற்போது இணையத்தில் ‛டிரண்ட்’ ஆகி வருகிறது.