மார்க் ஆண்டனி


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான விஷால் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி ஆகிய படங்கள் சரியாகப் போகவில்லை. இதனால் தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில்  த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் “மார்க் ஆண்டனி” படத்தில் கூட்டணி வைத்துள்ளார் விஷால்.


இந்தப் படத்தில் ஹீரோவாக விஷாலும் ஹீரோயினாக ரித்து வர்மாவும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கேரக்டரில் இப்படத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியானது. தாடியும், கையில் துப்பாக்கியுமாக விஷால் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. 


மார்க் ஆண்டனி பட டீசர்


மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. போன் வழியாக காலத்தை கடத்தும்  டைம் டிராவல் நிகழ்வுகள் இதில் கதையாக அமைக்கப்பட்டுள்ளது என்பது டீசரில் வெளியான காட்சிகள் மூலம் தெரிய வருகிறது.


மார்க் ஆண்டனி பெயர் வைத்ததற்கான காரணம்


அண்மையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட படக்குழுவினர் படம் குறித்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை அளித்தனர். அப்போது மார்க் ஆண்டனி  என்று தனது படத்திற்கு பெயர் வைத்ததற்கான காரணம் பற்றி கேட்கப்பட்ட போது பதிலளித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்,  நடிகர் ரகுவரன் தனக்கு மிகப் பிடித்த நடிகர் என்றும், பாஷா படத்தில் அவர் நடித்த மார்க் ஆண்டனி கதாபாத்திரம் தனக்கு மிக பிடித்த கதாபாத்திரம் என்றும் கூறினார்.


பாட்ஷா படத்தில் பாட்ஷா ஒரு பயங்கரமான கதாபாத்திரம் என்றும், அப்படியான பாட்ஷாவைவிட பயங்கரமான ஒரு கதாபாத்திரமாக ரகுவரன் நடித்திருப்பார் என்றும் அவர் கூறினார். தனது படத்திற்கு என்ன டைட்டில் வைக்கலாம் என்று  யோசித்துக் கொண்டிருந்தபோது தனது டைரியில் மார்க் ஆண்டனி என்கிற பெயர் கதைக்கு மிகச் சரியாக பொருந்தியதால் இந்தப் பெயரைத் தேர்வு செய்ததாக கூறினார்.   வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது மார்க் ஆண்டனி திரைப்படம்.


மேலும் படிக்க: Tamannaah - Vijay Varma: தமன்னாவால் காதலருக்கு இப்படி ஒரு சோதனையா... வீட்டில் அழுத்தம்... திருமணம் பற்றி மனம் திறந்த விஜய் வர்மா!


Vasantha Maligai: பூமர் காதலா... பூஸ்ட் காதலா... 2கே கிட்ஸ் பார்வையில் ‘வசந்த மாளிகை’ படம் எப்படி? இதோ ஒரு அலசல்!