ஜூலி... என்கிற பெயரை தெரியாத ஒருவர் இருந்தால், அவர் அனேகமாக வேற்று கிரகத்தில் வசிப்பவராகவே இருக்கக் கூடும். ஒரே நாளில் ஓஹோ என உயரத்திற்குச் சென்றவரையும் பார்த்திருக்க மாட்டோம், அதே உயரத்தில் இருந்து ஒரே நாளில் தொபுக்கட்டி என கீழே விழுந்தவரையும் பார்த்திருக்க மாட்டோம்.
அப்படி, உயர்ந்து, அதே வேகத்தில் வீழ்ந்தவர் ஜூலி. மரிய ஜூலியானா என அறியப்படுபவர். ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது, அதில் பங்கேற்று ஆக்ரோஷமாக போராட்டம் நடத்திய ஜூலி, அப்போது ‛வீரத்தமிழச்சி’ என அனைவராலும் அறியப்பட்டார். அதன் பின், அதே பெருமையோடு பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் எண்ட்ரியான ஜூலிக்கு, அதோடு அத்தனையும் காலி.
அவரது குணாதிசயம், பேச்சு, பழக்க வழக்கம் எல்லாமே கடுமையாக விமர்சனமானது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். ஓவர் ஆக்ட் என்கிற பெயரோடு, ஓவர் டோஸ் ஆக்ட் என்கிற அளவுக்கு ஜூலியை கலாய்த்து தள்ளினர். இன்னும்சொல்ல வேண்டுமானால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபலமாக்கியதில் ஜூலிக்கு பெரும் பங்கு உண்டு. ஜூலிக்காக அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் தான் அதிகம். அதிக ட்ரோல் ஆனதும் ஜூலி தான்.
அதன் பின், ஜூலியின் நடவடிக்கைககள் விமர்சிக்கப்பட்டது. வெளியில் வந்தும், தான் கசப்பான அனுபவங்களை சந்தித்ததாக ஜூலி வெளிப்படையாக கூறத் தொடங்கினர். அதுமட்டுமின்றி, ஜூலியை மீம்ஸ் கன்டண்டாகமாற்றினர். எந்த அளவிற்கு ஆதரவாளர்கள் இருந்தார்களோ அதே அளவிற்கு ஹேட்டர்களை சந்தித்தார் ஜூலி.
இன்றும் சந்தித்து கொண்டிருக்கும் ஜூலி. ஒரு கட்டத்தில் இந்த உலகம் இப்படி தான் என்பதை அறிந்து கொண்ட ஜூலி, தன்னை எப்படி பார்க்கிறார்களோ, அதே பாணிக்கு மாறத் தொடங்கினர். விமர்சனங்களை எல்லாம் தூரத்தள்ளி, தன் பாதையில் நடக்கச் சென்றார். சமீபத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற ஜூலி, முடிந்த வரை தனது பெயரை மீட்டு எடுக்க முயற்சித்து, அதில் பெரிய வெற்றியை பெற முடியாமல் வெளியேறினார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் ஜூலி, அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி, தனது இருப்பை பதிவு செய்து வந்தார். பெரும்பாலான நடிகைகள் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு, அதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற முயற்சிக்கின்றனர். அந்த வகையில், நானும் போடுவேன் என்பதைப் போல, ஜூலியும் தன் பங்கிற்கு கிளாமர் போட்டோக்களை போட்டு வருகிறார். சந்திரமுகி படத்தில் வடிவேலு ஒரு டயலாக் சொல்வார்; ‛நாங்களும் சீப்பு வெச்சிருக்கோம்... தலையை கலைத்துவிடுவோம்... சீவுவோம்...’ என்று. அது மாதிரி தான், நானும் கிளாமர் ஸ்டில் எடுப்பேன் என ஜூலியும் தனது இன்ஸ்ட்ராவில் அட்ராசிட்டி செய்து வருகிறார்.