Vaazhai: பெரும் வரவேற்பு! ரிலீசானது வாழை பட மேக்கிங் வீடியோ! ஆட்டம் போட வைக்கும் நாயன மேளம்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

பரியேறும் பெருமாள் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி கர்ணன், மாமன்னன் என்ற அடுத்தடுத்த படங்கள் மூலமாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளவர் மாரிசெல்வராஜ். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை.

Continues below advertisement

வாழை மேக்கிங் வீடியோ:

தனது சிறு வயதில் நடந்த சம்பவத்தை படமாக எடுத்துள்ள மாரி செல்வராஜ் அதை சிறுவர்களின் பார்வையிலே கூறியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பிரபலங்கள் ரசிகர்களின் பாராட்டுக்களை குவித்து வரும் வாழை திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

திங்க் மியூசிக் இன்டியா யூ டியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், வாழை படத்தின் படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள், சிறுவர்களுடனும், அந்த கிராம மக்களுடனும் மாரி செல்வராஜ் இணைந்து இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

பெரும் வரவேற்பு:

வாழை படத்தின் பிரதான நாயர்களாக நடித்துள்ள பொன்வேல் மற்றும் ராகுல் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி என படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தேர்வும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் இந்த கதைக்களத்தை மிக தத்ரூபமாக காட்சிப்படுத்தி அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இன்று வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola