கண்ணீரையும், கதறலையும் சினிமாவாக்கிட்டேன்.. இளைப்பாறுவேன்.. மாரி செல்வராஜ்
Mari Selvaraj : 'வாழை' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் போஸ்ட் பகிர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
Continues below advertisement

மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவின் தனித்துமான இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'வாழை'.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களை தொடர்ந்து இது அவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள நான்காவது திரைப்படம். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' பிரியங்கா மற்றும் இரு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் சிறு வயதில் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் திரையரங்க ரிலீசுக்கு முன்னரே பல பிரபலங்களுக்கு சிறப்பு திரையிடல் மூலம் படம் திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த இயக்குநர் பாலா, பா. ரஞ்சித், ராம், மணிரத்னம் உள்ளிட்ட பலரும் மனம் நெகிழ்ந்து உணர்ச்சி போங்க பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர். நடிகர் சூரி 'வாழை' படத்தை பார்த்து பின்னர் மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தத்தால் நனைத்துவிட்டார்.
பிரபலங்கள் மட்டுமின்றி ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சினிமா விமர்சகர்கள் கூட படத்தின் மேக்கிங்கை பாராட்டியது படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. அந்த வகையில் படம் வெளியான முதல் காட்சி முதல் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து பாராட்டுகளை தெரிவித்த வண்ணமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் 'வாழை' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். "அனைவருக்கும் அன்பின் வணக்கம். இன்று ஏன் நான்காவது படமான 'வாழை' வெளியாகிறது.
ஏன் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாகி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முத்தத்திலும், அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த போஸ்டுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களையும் கமெண்ட் மூலம் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
Just In
இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. மக்களை கவரும் காதல் டிராமா.. ஒரே ரொமான்ஸ் தான் போங்க
தடைகளை உடைத்து திரைக்கு வரும் வெற்றிமாறன் படம்.. "பேட் கேர்ள்" ரிலீஸ் எப்போது தெரியுமா?
Dhanush: தனுஷ் D54 படத்தின் பூஜை.. சென்சேஷன் ஹீரோயின்.. இயக்குநர் யார் தெரியுமா?
D54 Pooja Stills: வேட்டி சட்டையில் சிம்பிளாக வந்த தனுஷ்! அமைதியாக நடந்து முடிந்த D54 பூஜை..
நடிகர் கிங்காங் மகள் திருமணம்.. ஆனந்த கண்ணீர் வடித்த குடும்பம்.. திரை பிரபலங்கள் பங்கேற்பு
சட்டவிரோத சூதாட்ட செயலி.. நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா மீது வழக்கு!
'வாழை' படத்தின் FDFS காட்சியை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.