தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த புராஜெட்களில் இயக்குநர் மாரி செல்வராஜ் பிஸியாக உள்ளார். அவர் இயக்கிவரும் வாழை திரைப்படத்திற்கு அடுத்து நடிகர் துருவ் விக்ரமின் படத்திற்கான ஷூட்டிங் தொடங்கும் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், மாமன்னன், வாழை ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், கர்ணன் திரைப்பட ஹூட்டிங்கின்போது, நடிகர் துருவ் விக்ரமுடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக செய்தி உறுதியானது. ஆனால், அந்தப் படம் சில காரணங்களினால் ஷூட்டிங் தடைப்பட்டது. எப்போது துருவ் விக்ரமின் திரைப்பட ஷூட்டிங் தொடங்கப்படும் என்ற கேள்விக்கு சமீபத்தில் நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்ட மாரி செல்வராஜ் பதிலளித்துள்ளார். 


தனுஷ் நடிகர் சங்கம் சார்ப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரமலான் சிறப்பு மாதத்தை முன்னிட்டு உணவு வழங்கும் நிகழ்ச்சியை மாரி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் திரைப்பட திட்டங்கள், மாமன்னன் படம் உள்ளிட்டவைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, துருவ் விக்ரம் உடன் இணைந்து இயக்கும் திரைப்படத்தின் ஷூட்டின் தனது வாழை திரைப்படத்திற்கு அடுத்து தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.


தனுஷ் -மாரி செல்வராஜ் கூட்டணி:


துருவ் விக்ரம் படத்திற்கு அடுத்து, தனுஷ் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தனுஷை கதாநாயகனாக இயக்கும் திரைப்படம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அதனாலேயே அதன் தயாரிப்பு பணிகளுக்கு நேரம் எடுப்பதாகவும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.