மாரி செல்வராஜ்


பரியேறு பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே கமர்சியல் வெற்றியைக் கொடுத்து தனது அரசியலையும் மிக துணிச்சலுடன் பேசியவர் மாரி செல்வராஜ். அடுத்தபடியாக தனுஷ் கூட்டணியில் வெளியான கர்ணன் திரைப்படம் வசூல் மற்றும் விம்ரசன ரீதியாக பெரிய வெற்றிபெற்றது. உதயநிதி நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படம் மாரி செல்வராஜை  சினிமாவில் ஒடுக்கபட்டோருக்கான அரசியலை பேசுவதிலும் தவிர்க்கவே முடியாத இயக்குநராக மாற்றியது. கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் தனது சொந்த தயாரிப்பில் எடுத்த வாழைத் திரைப்படம் பட்டிதொட்டி எல்லாம் சக்கை போடு போட்டதுடன் வசூல் ரீதியாகவும் பல மடங்கு வாரிக் குவித்தது. 


பைசன்


நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிவரும் படம் பைசன். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாரயாயண் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கபடியை மையமாக வைத்து பீரியட் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக மாரி செல்வராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். பைசன் படப்பிடிப்பு முடிந்ததைத் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. 


அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேகில் நாயகனாக அறிமுகமானார் துருவ் விக்ரம். முதலில் பாலா வர்மா என்கிற டைட்டில் இப்படத்தை இயக்கினார். பின் இயக்குநர் பாலாவுக்கும் நடிகர் விக்ரமுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விக்ரம் தானே இப்படத்தை இயக்கினார். படம் தொடர்பாக இந்த பிரச்சனையில் துருவ் விக்ரமின் நடிப்பு பெரியளவில் கவனிக்கப்படாமலே போனது. தற்போது பைசன் திரைப்படம் ஒரு நடிகனாக துருவ் விக்ரமுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்றும் இந்த படத்தில் அவரது நடிப்பு திறமையை ரசிகர்கள் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கலாம். கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன