உன்னி முகுந்தன் 

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் உன்னி முகுந்தன். கடந்த ஆண்டு தமிழில் சூரியின் கருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் இவர் இயக்கி நடித்த மார்கோ திரைப்படம் பான் இந்திய அளவில் மிகபெரிய வெற்றிபெற்றது. கன்னடத்தில் கே.ஜி.எஃப் , தெலுங்கில் புஷ்பா என மற்ற மொழிகளில் மட்டுமே பான் இந்தியளவில் கவந்த்தை ஈர்க்கும் படங்கள் வெளியாகி வந்த நிலையில் மலையாளத்திலும் அதே அளவிற்கு தரமான ஆக்‌ஷன் கமர்சியல் படத்தை இயக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்.

உன்னி முகுந்தன் மீது புகார்

உன்னி முகுந்தன் மீது திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் அவரது மேனேஜர் புகாரளித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. உன்னி முகுந்தனின் மேனேஜரான விபின் குமார் சமீபத்தில் வெளியான டொவினோ தாமஸ் நடித்த நரிவேட்ட படத்தை பாராட்டி பதிவிட்டதால் கடுப்பான உன்னி முகுந்தன் அவரை திட்டி அடித்ததாக காவல் துறையில் புகாரளித்துள்ளார் விபின் குமார். இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உன்னி முகுந்தனை காவல் துறை விசாரணை செய்து வருகிறது. சக நடிகரின் படத்தை பாராட்டியதற்காக தனது மேனேஜரை உன்னி முகுந்தன் சரமாரியாக தாக்கியுள்ள நிகழ்வு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பல நல்ல கதைகளை தேர்ந்து நடித்து வரும் உன்னி முகுந்தன் மார்கோ படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார். தனி மனிதனாக நடிப்ப் , தயாரிப்பு , இயக்குநர் என பல விஷயங்களை செய்து வரும் உன்னி முகுந்தன் இப்படி ஒரு செயலை செய்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 

குற்றச்சாட்டை மறுத்த உன்னி முகுந்தன் 

விபின் குமாரின் குற்றச்சாட்டுகளை உன்னி முகுந்தன் மறுத்துள்ளார். விபின் குமாரை தான் அடிக்கவில்லை என்றும் தனக்கு எதிராக விபின் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அதை விபினிடம் தான் விசாரித்ததாக உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார். டொவினோ தாமஸ் உடனான நட்பை கெடுக்கும் விதமாக இந்த பொய் பிரச்சாரம் மெற்கொள்ளப்படுவதாக உன்னி முகுந்தன் குறியுள்ளார்