சக்கு சக்கு வத்திக்குச்சி :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனை குவித்து வருகிறது. படத்தின் சில காட்சிகளில் லோகேஷ் சில ரெட்ரோ பாடல்களை வைத்திருந்தார். அது பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது . அந்த வகையில் படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றிலும், ஜெயில் காட்சியிலும் இடம்பெற்ற 'சக்குச் சக்கு வத்திக்குச்சி சட்டுனுதான் பத்திக்கிச்சு' எனும் பாடல் சமீப நாட்களாக சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் 1995-ம் ஆண்டு வெளியான `அசுரன்' எனும் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் . பிரபல கவிஞர் பிறைசூடன் எழுதிய இந்த பாடலுக்கு ஆதித்தன் இசையமைத்திருந்தார். பாடலுக்கு புரோகிராம் செய்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் . இதனை அவரே ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
ரீ-கிரியேட் செய்த மன்சூர் அலிகான் :
சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு மன்சூர் அலிகான் க்யூட் அண்ட் கூலான நடன அசைவுகளை போட்டிருப்பார். அந்த பாடலை பார்க்காதவர்கள் கூட விக்ரம் திரைப்பட வைரலுக்கு பிறகு நிச்சயம் பார்த்திருப்பீர்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பலரும் அந்த போஷனுக்கு நடனமாடி பதிவிட்டு வரும் நிலையில் , நடிகர் மன்சூர் அலிகானும் தன்னுடைய பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். 1995 ஆம் ஆண்டு என்ன மாதிரியான துள்ளல் நடன அசைவுகளை மன்சூர் போட்டாரோ , அதை அப்படியே செய்து அசத்தியிருக்கிறார்.” வாவ் “ என வாயை பிளக்கும் அளவுக்கு மன்சூர் அலிகான் ஆடிய நடனத்தை கீழே காணலாம்.
ஃபேன் பாய் லோகேஷ் :
லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகன் என்பது நமக்கு தெரியும். அதே அளவிற்கு மன்சூர் அலிகானின் தீவிர ரசிகரும் கூட. அவர் கார்த்தியை வைத்து இயக்கிய கைதி திரைப்படத்தை முதன் முதலில் மன்சூர் அலிகானை மனதில் வைத்துதான் எழுதியிருந்தார். அதனை பல மேடைகளில் அவரே கூறியிருக்கிறார். லோகேஷ் மன்சூர் பற்றி கூறுகையில் “ மன்சூர் அலிகானின் இயல்பான சுவாரஸ்ய குணம் எனக்கு பிடிக்கும் , அவர் கொடுத்த நேர்காணலில் தொகுப்பாளர் ஒரு பக்கம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க , அவர் மரத்தின் இலைகளை பறித்து பீப்பீ ஊதிக்கொண்டிருப்பார். அது போல எந்த நடிகராவது செய்ய முடியுமா ? அது அவரால் மட்டும்தான் முடியும் .அவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் வித்தியாசமானவர் “ என்றார். அந்த நேர்காணலுக்கு பிறகு மன்சூர் அலிகானின் பல தக் லைஃப் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது.