நடிகர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முக கலைஞராக சினிமாவில் திகழ்கிறார். வேலை கிடைச்சிடுச்சு என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால், விஜயகாந்த் நடிப்பில் வந்த கேப்டன் பிரபாகரன் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தில் வரும் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு டான்ஸூம் ஆடியிருப்பார். இந்தப் பாடல் இன்றும் டிரெங்கில் தான் இருக்கு. இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு வில்லன் ரோலில் ஏராளமான படங்களில் நடித்தார்.
ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். 90ஸ் காலகட்டங்களில் வருடத்திற்கு 10க்கும் அதிகமான படங்களில் நடித்து பிஸியான நடிகராக வலம் வந்தார். இப்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் நடித்த லியோ படத்தில் நடித்திருந்தார். கடைசியாக கங்குவா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் சில பாடல்களும் பாடியிருக்கிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் மன்சூர் அலி கானின் மகன் அலிகான் துக்ளக்கை போலீசார் கைது செய்யப்பட்டார். அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பயன்படுத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் கூறி அவரை போலீசார் கைது செய்தனர். அலிகான் துக்ளக்கை கைது செய்து வேனில் அழைத்து செல்வதற்கு முன் தப்பு பண்ணியா, ஏன் தப்பு பண்ணுற என்று பேசும் வீடியோ வெளியானது.
இந்த நிலையில் தான் மன்சூர் அலி கான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அளித்த பேட்டியில் என்னுடைய மகனை நான் தான் போலீசில் புடிச்சு கொடுத்தேன். அவன் சிகரெட் பிடிப்பானா என்று கூட எனக்கு தெரியாது. அவனை விசாரிக்க அழைத்து சென்ற போது தப்பு செய்தாயா என்று கேட்டேன். ஆமா என்றான். பளார்னு ஒருஅறை விட்டேன். என்னுடைய மகன் மட்டுமல்ல யார் செய்தாலும் தப்பு தப்பு தான். இப்போது பள்ளி குழந்தைகள் வரை கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள் என்று மனம் வருத்தி கூறி இருக்கிறார்.
.