Mansoor Ali Khan Workout: ‘தளபதி 67’ -ல் வாய்ப்பு ?.. வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் மன்சூர் அலிகான்.. வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகர் மன்சூர் அலிகான் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

பிரபல நடிகர் மன்சூர் அலிகான் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

 

குரூப் டான்சராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகர் மன்சூர் அலிகான். அதன் பின்னர் ஸ்டண்ட் மேனாக மாறி சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்ட ஆரம்பித்த அவர் ‘வேலை கிடைச்சிருச்சு’ படத்தில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு, ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் இவர் ஏற்று நடித்த வீரபத்திரன் கதாபாத்திரம் அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அதன் பின்னர் ‘செம்பருத்தி’,‘தேவா’, ‘மக்கள் ஆட்சி’ ‘நட்புக்காக’,  ‘படையப்பா’, ‘வல்லரசு’ ‘தென்னவன்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். இவரது வில்லத்தனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. அதனைத்தொடர்ந்து பல படங்களில் பல வேடங்களில் நடித்த மன்சூர் அலிகான், இந்த காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு வில்லத்தனம் கலந்த காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

 

சமீபகாலமாக இவர் மேலும் பிரபலமானது இயக்குநர் லோகேஷ் கனகராஜால் என்று சொல்லலாம். மாநகரம், கைதி, விஜயின் மாஸ்டர், விக்ரம் என தொடர் ஹிட்களை கொடுத்து வரும் லோகேஷ் தனது படங்களில் மட்டுமல்லாது தான் பங்கேற்கும் பேட்டிகளில் மன்சூர் அலிகானை பற்றி சிலாகித்து பேசினார். இதன் காரணமாக பலரும் மன்சூர் அலிகானின் காமெடித்தனத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டனர். அண்மையில்  ‘’நட்புன்னா என்னன்னு தெரியுமா’ ‘ ஜாக்பாட்’  ‘தி லெஜண்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்த மன்சூர் அலிகான் அடுத்ததாக விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இந்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜே பேட்டி ஒன்றில் சொல்லி இருந்தார். இந்த நிலையில் அந்த படத்திற்காகத்தான் மன்சூர் அலிகான் உடல் எடையை குறைக்க, கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola