நடிகர் பாரதிராஜாவின் மகனும் துணை இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவுக்கு நடிகர் அஜீத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்கிற முகமும் உண்டு.  அவருடனான தனது நட்பு மற்றும் இளையராஜா கங்கை அமரன் ஆகியோரின் குடும்பத்துடனான தனது நட்பு குறித்து மனோஜ் அண்மையில் பகிர்ந்திருந்தார். 


“தாஜ்மஹால் படத்தின் பாடல் வெளியானதும் அதன் வீடியோவை எடுத்துக்கொண்டு போய் அஜீத்துக்குப் போட்டுக் காட்டினேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார்.மகிழ்ச்சியில் கெட்ட வார்த்தையால் திட்டினார். எனக்கெல்லாம் உழைச்சு முன்னேறி வர வேண்டி இருந்தது. உனக்குப் பார் உன்னுடைய அப்பாவின் படத்திலேயே அறிமுகம், ரஹ்மான் இசை என பெரிய அளவில் ஓப்பனிங் கிடைச்சிருக்கு” என்றார். என் நலனுக்காக எப்பவும் சிந்திப்பவர் அவர்” என மனோஜ் கூறினார். 


மேலும் வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி அமரன் மற்றும் வாசுகி பாஸ்கர் உடனான தனது உறவு குறித்துப் பேசிய மனோஜ் “நாங்கள் எல்லாம் சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். சூட்டிங் ஸ்பாட்டில் இந்த அண்ணன் தம்பிகள் இருவரின் காமெடி சென்ஸ் அடித்துக்கொள்ளவே முடியாது.நாங்கள் எல்லாம் சிரித்து கொண்டே இருப்போம்.வெங்கட் பிரபு ஹாலிவுட் படத்தைத் திருடிவிட்டார் அது இது எனப் புகார் அளிக்கிறார்கள். யார்தான் இன்ஸ்பையர் ஆகவில்லை. நாங்கள் எல்லாம் சிறிய வயதிலிருந்தே ஒன்றாக அமர்ந்து படம் பார்த்து வளர்ந்தவர்கள்” என்றார். 






கூடுதல் தகவலாக விஜய் தனது அண்டை வீட்டுக்காரர் எனப் பகிர்ந்த அவர் தனது திருமணத்துக்கு அவர் வந்ததையும் தன் வீட்டில் தன் அப்பா எப்போதாவது பார்ட்டி வைத்தால் அதற்கு அவர் வருவார் என்றும் மிகவும் அமைதியானவர், இண்ட்ரோவெர்ட், தாங்கள் தன் வீட்டு மாடிக்குப் போனால் கூட அவர் வீட்டு மாடியில் அவர் அமர்ந்திருந்தால் உடனடியாக எழுந்து உள்ளே சென்றுவிடுவார் என்றார்.


மனோஜ் அண்மையில் நடிகர் கார்த்தியுடன் விருமன் படத்தில் நடித்திருந்தார்.