இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படத்தில் அறிமுகமானவர் அவரது மகன் மனோஜ் இயக்குநர்கள் மணிரத்னம் சங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் அண்மையில் அளித்த பேட்டியில் இருந்து..


“அப்பாவின் படத்தை ரீமேக் செய்து நடிக்க வேண்டுமென்றால் எனக்கு மன்வாசனையை ரீமேக் செய்து நடிக்க வேண்டும், ஒருவேளை மண் வாசனை போன்ற படத்தில் நடித்திருந்தால் எனது நடிப்பு கேரியர் வேறு விதமாக அமைந்திருக்கலாம். அப்பாவுக்கு அண்மையில் வெளியான படங்களில் அசுரன், கூழாங்கல் மிகவும் பிடித்திருந்தது. மிகவும் பாராட்டினார். அப்பாவின் படத்தை நான் ரீமேக் செய்ய வேண்டும் என்றால் ஏற்கெனவே சிகப்பு ரோஜாக்கள் லிஸ்ட்டில் இருக்கிறது. அதே போல கைதியின் டைரி ரீமேக் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அதில் கண்டிப்பாக அஜீத்தான் ஹீரோ.வேற யாருமே இல்லை” என்கிறார். 










இப்படிச் சொல்லும் மனோஜுக்கு விஜய் சேதுபதி ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்.அவருடன் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம்.


மனோஜ் அண்மையில் முத்தையா இயக்கத்தில் கார்த்தியுடன் விருமன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.