சாம்ராட், கோவை பிரதர்ஸ், இங்கிலீஷ்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி சிதம்பரம். சமீபத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் பிரபுவை வைத்து 'சார்லி சாப்ளின் 2' படத்தை இயக்கி இருந்தார். பின்னர் யோகி பாபு ஹீரோவாக நடிக்க 'பேய் மாமா' திரைப்படத்தை இயக்கினார். கடைசியாக வந்த இரு திரைப்படங்களும் வீக்கான திரைக்கதையால் சொதப்பியது. அந்த திரைப்படம் வெளியானபோது அவர் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், எப்படி உங்களிடமிருந்து பேய் படம் என்று கேட்கையில், "எனக்கும் பேய் படம் எடுக்க முன்னெல்லாம் விருப்பம் இருந்தது இல்லை. ஆனால் ஒரு வித்யாசமான பிளாஷ்பேக் தோன்றினால் செய்யலாம் என்று ஒரு ஐடியா இருந்தது. வழக்கமான பேய் படங்கள் போன்று, ஒரு பெண்ணை ஏமாற்றி கொலை செய்யும் கதை இல்லாமல், வேறு ஒரு வித்தியாசமான கதை தேடிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு ஐடியா வந்ததும் செய்தது தான் 'பேய் மாமா'." என்றார்.



அவரது படங்களில் எப்போதும் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கும், அதுவும் இருக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வெளியில் தெரியும் விதமாக சமமாக உருவாக்கப்பட்டிருக்கும். அதனை எப்படி மேனேஜ் செய்கிறார் என்று கேட்டபோது, "சார்லி சாப்ளின் முதல் பாகம் பண்ணும்போது, பிரபுதேவா, பிரபு சார் ரெண்டு பேருமே நடிச்சுருப்பாங்க, ரெண்டு பேரும் அடுத்தவங்களோட கேரக்டர் அதிகமா இருக்குன்னு ஃபீல் பண்ண கூடாதுன்னு நானே பயந்துட்டு இருக்கும்போது, அவங்களே இத சாருக்கு கொடுத்திடுங்க, இத பிரபுதேவாவுக்கு கொடுத்திடுங்கன்னு சொல்லி ஈஸி ஆக்கிட்டாங்க. சத்யராஜ் சார வச்சு என்னம்மா கண்ணு பண்ணும்போது, அந்த கதை அஜித் சாருக்காக பண்ணது, மன்மதன்னு டைட்டில், அப்போ அவர் டேட் கிடைக்கல. அப்புறம் சத்யராஜ் சாருக்காக மாத்தினோம். அவருக்காக அவரோட பாடி லாங்குவேஜிர்க்காக மாத்த அவரோட படமா போட்டு போட்டு பாத்துட்டு இருக்குறப்போ, 'என்னம்மா கண்ணு' டைட்டில் சிக்கிடுச்சு. 'கண்ணு…' ன்னு சொன்னா சத்யராஜ் சார், 'கண்ணா…' ன்னு சொன்னா ரஜினி சார், 'ஏனுங்கண்ணா' ன்னு சொன்னா விஜய் சார், அது மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாடி லாங்க்வேஜ் இருக்கும், அதை கதைக்கு ஏத்த மாதிரி நாம மாதிக்க வேண்டியதுதான். கதையோட கண்டெண்ட் மாற போறது இல்ல. 'பேய்மாமா' வடிவேலு சாருக்காக பண்ணது, அதை யோகிபாபுக்காக மாத்திக்கிட்டோம்." என்று கூறினார்.



மன்மதன் திரைப்படம், 'என்னம்மா கண்ணு'வாக மாறியது குறித்து மேலும் பேசிய அவர், "டயலாக்கை படித்துவிட்டு, மணிவண்ணன் சாருக்கு அப்புறம் என்னோட பாடி லேங்க்வேஜுக்கு ஏத்த மாதிரி டையலாக்ஸ் எழுதினது நீங்கதான் ன்னு சொன்னார் சத்யராஜ் சார். அஜித் சாருக்காக எழுதினாலும், அதை ஜெனியூனா மாத்தும்போது, நல்ல அவுட்புட்டோட வரும். சத்யராஜ வச்சு ஏழு படம் பண்ணிருக்கேன். வடிவேலுன்னா வடிவேலுவா நான் மாறுவேன், யோகி பாபுன்னா யோகி பாபுவா நான் மாறுவேன், இப்போ புகழ் வச்சு ஒரு படம் பன்றேன், அப்போ புகழுக்கு அடாப்ட் பண்ணுவேன், சந்தானம் சாரை வச்சு பன்றேனா, அதுக்கு அடாப்ட் பண்ணுவேன். ஒரு இயக்குனரின் இயல்பு அதுதான். அவர்களுக்குள் அதை செலுத்தும்போது அதுவாக நீங்கள் மாற வேண்டும்." என்று கூறினார்.