பெரிதும் கொண்டாடப்பட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் பற்றி சுவாரஸ்யமான சில உண்மைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குநர் சிதம்பரம்.


மஞ்சும்மல் பாய்ஸ்


சிதம்பரம்.எஸ்.பொதுவால் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ் (Manjummel Boys). தமிழில் இப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று இப்படத்தில் படக்குழு நிச்சயமாக எதிர்பார்த்திருக்காது. மலையாள சினிமாவில் வரலாற்றில் அதி விரைவில் ரூ.100 கோடி வசூல் ஈட்டிய முதல் படம் என்கிற வரலாற்றை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. தற்போது உலக அளவில் இப்படம் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்


மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றி மீண்டும் குணா குகையை பிரபலமாக்கியுள்ளது. கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக புறப்பட்டு குணா குகையைப் பார்க்க படையெடுத்து வருகிறார்கள். மேலும் குணா குகையில் இருக்கும் மர்மங்கள், அமானுஷ்யங்கள் என பலவிதமான கும்பல் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. 






மேலும் உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் நண்பர்கள் குழுவும் தற்போது குணா குகையை பார்வையிடச் சென்றுள்ளது மேலும் கூட்டத்தை ஈர்த்துள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


அதாவது குணா குகையில் விழுந்த சுபாஷ் என்பவர் ஒரு சரிவான பள்ளத்தில் பாதி தொடங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த பெல்ட் ஒரு சிறிய இடுக்கில் சிக்கி அவரது உயிரைக் காப்பியதாக இயக்குநர் சிதம்பரம் தெரிவித்தார். சுபாஷ் அணிந்திருந்த அந்த பெல்ட் தனது சகோதரனிடம் இருந்து அவர் பெற்று வந்தது.


இந்தக் காட்சி படத்திலும் இடம்பெற்றிருக்கும். ஒரு சிறிய பெல்ட் சுபாஷின் உயிரைக் காப்பாற்றியதை தான் படத்தில் வைக்க வேண்டும் என்று முயற்சித்ததாகவும், ஆனால் இருட்டு காரணமாகவும் அந்தக் காட்சியை எடுப்பதில் சில சவால்கள் இருந்ததால், தன்னால் அதை படத்தில் வைக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.