அறிமுக இயக்குனர், விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் ‘குட் நைட்’. படத்தில் மீத்தா ரகுநாத் நாயகியாக நடித்துள்ளார். தவிர, ரமேஷ் திலக், பகவதி பெருமாள் என்ற பக்ஸ், பாலாஜி சக்திவேல்,  உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது.


ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.20 கோடி வசூலை நெருங்கியதாக தகவல் வெளியானது. கடந்த மேமாதம் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் குறட்டையால் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘குட் நைட்’ திரைப்படம் வரும் ஜூலை 3-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் காண முடியும்.


குறட்டையை மையப்படுத்தி தயாரான இந்த திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது. தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், அர்த்தமுள்ள வகையிலும் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.


நடிகர் மணிகன்டன் ஜெய்பீம் படத்தில் நாடித்து பிரலமானவர்.அண்மையில் கலக்கப் போவது யாரு சம்பியன் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட மணிகண்டன். நான் என்னுடைய கெரியரை கலக்கப் போவது யாரு மேடையில் தான் ஸ்ராட் பண்ணினேன். எனக்குள்ள இருக்கிற மிமிக்கிரி திறமையை இங்க தான் வெளிப்படுத்தினேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் 4 வது சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.