Maniratnam: விஜய், அஜித்துக்காக சண்டையிடுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம்:
1985 ஆம் ஆண்டு இதயகோயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் மணிரத்னம். வயது தற்போது 67-ஐ கடந்து விட்ட நிலையில், தமிழ் சினிமாவின் ஐகானிக் இயக்குநராக உள்ளார். எந்த இயக்குநரானாலும் மணிரத்னம் படத்தில் இடம்பெற்ற மாதிரியான காதல் காட்சிகள் தங்கள் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க வைக்கும் அளவுக்கு மேக்கிங்கில் பின்னி விடுவார்.
ரஜினி, கமல், மோகன்லால், மாதவன், சிம்பு, சூர்யா, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான் என முன்னணி நடிகர் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவருடனும் மணிரத்னம் பணியாற்றியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் கனவு காவியமாக கருதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக உருவாக்கி சாதனை படைத்தார். ஏதோ தாங்களே ஜெயித்து விட்டதாக தமிழ் சினிமா இப்படத்தை கொண்டாடி தீர்த்தது. பிரம்மாண்ட வெற்றி பெற்ற இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளதாக மணிரத்னம் அறிவித்துள்ளார்.
"நடிகர்களுக்காக சண்டை போடுவது அர்த்தமில்லை”
நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகளவில் கிளிப்பி இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் மணிரத்னம், வெற்றிமாறம், மாரி செல்வராஜ், சுதா கொங்கரா, மடோன் அஸ்வின், வினோத் ராஜ் ஆகியோர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டனர்.
அந்த போட்டியில் பேசிய மணிரத்னம், "சோஷியில் மீடியா போர்க்களம் போல காட்சியளிக்கிறது. சோஷியில் மீடியாக்களில் தற்போது வன்மமாக தான் பேசுறாங்க. சோஷியல் மீடியாவில் நெகட்டிவிட்டி தான் அதிகமாக உள்ளது. நடிகர்களுக்காக ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர். நடிகர்களுக்காக ரசிகர்கள் சண்டையிடக் கூடாது. எனக்கு அஜித்தை பிடிக்கும், விஜய்யை பிடிக்கும் என்று சண்டை போடுவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றால், அது குறித்து பேசிக் கொள்வது தவறு இல்லை. ஆனால், நடிகர்களுக்காக சண்டை போடுவது நடுத்தெருவில் நின்று ஒருவருக்கொருவர் சண்டையிடுவது போல் உள்ளது” என்று இயக்குநர் மணிரத்னம் பேசி உள்ளார்.
மேலும் படிக்க