35 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் கிரிஜா:


'கீதாஞ்சலி' படத்தின் மூலமாக அறிமுகமான கிரிஜா 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்ப வந்துள்ளார். 
தெலுங்கு சினிமாவில் மணிரத்னம் இயக்கிய முதல் படம் கீதாஞ்சலி. இந்தப் படத்தில் நாகர்ஜூனா, கிரிஜா, விஜயகுமார், சௌகார் ஜானகி, சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, சுமித்ரா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் தமிழில் 'இதயத்தை திருடாதே' என்ற பெயரில் வெளியானது. இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். காதலை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி பெற்றது.


முன்னணி நடிகர்களுக்கு ஜோடி 


இந்தப் படம் தேசிய விருதையும், நந்தி விருதையும் பெற்று தந்தது. இந்தப் படத்தில் கிரிஜாவின் நடிப்பு பலரையும் வியக்க வைத்தது. இந்தப் படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து மலையாளத்தில் வந்தனம் என்ற படத்தில் நடித்தார். இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கிய இந்தப் படத்தில், மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. ஆனால், அந்த படங்கள் பாதியிலேயே நிற்கவே மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தினார். இதற்காக இங்கிலாந்து புறப்பட்டு சென்றார்.




2003 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சனம் மேரி கசம் என்ற பாலிவுட் படத்தில் கேமியோ ரோலில் வந்து சென்றார் கிரிஜா. இந்த நிலையில் தான் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். 'இப்பணி தப்பிதா இலேயாளி 'என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள து. விகான் கௌடா, அங்கீதா அமர், மயூரி நடராஜா, கிரிஜா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்துள்ள கிரிஜாவை பார்த்து, இவரா... அவர்? என்று கேட்கும் அளவிற்கு அவரது தோற்றம் மாறியிருந்தது. கீதாஞ்சலி படத்திற்கும் இந்தப் படத்திற்கும் நிறையவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.