Just In





நடிகை பாயல் ராஜ்புத்தின் ஷாக்கிங் போஸ்... இணையத்தை அதிரவைத்த மங்களவாரம் போஸ்டர்!
முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.

’RX 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை பாயல் ராஜ்புத், இயக்குநர் அஜய் பூபதியின் ‘செவ்வாய் கிழமை’ படத்தில் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்துள்ளது.
இயக்குநர் அஜய் பூபதியின் ‘RX 100’ திரைப்படம் டோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த படத்துக்கு 'செவ்வாய்கிழமை' எனத் தலைப்பிடப்படப்பட்டுள்ளது.
தனது லக்கி சார்ம் நடிகையும் 'RX 100' படத்தின் மூலம் புகழ் பெற்றவருமான பாயல் ராஜ்புத்துடன் மீண்டும் இயக்குநர் அஜய் பூபதி இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து ‘ஷைலஜா’ என அவரது கதாபாத்திரத்தின் முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கண்களில் கசப்பான உணர்வுடன் விரலில் பட்டாம்பூச்சியுடனும் நடிகை பாயல் ராஜ்புத் அரை நிர்வாணமாக இந்த போஸ்டரில் தோன்றியிருக்கும் நிலையில், தற்போது இணையத்தில் இந்த போஸ்டர் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் உடன் இணைந்து தயாரிப்பாளராக, இயக்குநர் அஜய் அறிமுகமாகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
படத்தின் சுவாரஸ்யமான முதல் பார்வை குறித்து இயக்குநர்- தயாரிப்பாளர் அஜய் பூபதி பேசியதாவது, “'செவ்வாய்கிழமை' திரைப்படம் 90களில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்ஷன் திரில்லர். பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும். திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும்.
இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத புதிய வகை ஜானரில் இந்தப் படம் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன, ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானது" என்றார்.
தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் ஆகியோர் பேசுகையில், ’RX 100' படத்தின் சிந்து போல, அஜய் பூபதியின் 'செவ்வாய்கிழமை' ஷைலஜாவும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் நினைவில் இருக்கும். நாங்கள் 75 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம்.
படத்தை உயர் தொழில்நுட்ப தரத்தில் உருவாக்குகிறோம். படத்தின் கடைசி ஷெட்யூலை அடுத்த மாதம் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதை அற்புதமாக உள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். 'காந்தாரா' புகழ் அஜனீஷ் லோக்நாத் இந்தப் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.