பொதுவாக ரசிகர்களுக்கு தான் விரும்பும் பிரபலங்களோடு செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது இயல்பான ஆசையாக இருக்கும். இதற்காக பிரபலங்கள் வரும் இடத்திற்கு முன்னமே வந்து, பவுன்சர்களை மீறி, பிரபலத்திடம் கெஞ்சி கூத்தாடி எப்படியாவது அந்த செல்ஃபியை எடுத்து விடுவார்கள். இதில் பிரபலத்தின் மீது கொண்ட அதீத அன்பால் சில சமயங்களில் ரசிகர்கள் எல்லை மீறி செல்வதும் உண்டு.


சூழ்நிலை இப்படி இருக்க, ஹிந்தியில் தனது கவர்ச்சிகரமான ஆடைகளால் கவனம் ஈர்க்கும் நடிகை ஊர்ப்பி ஜாவேத்திடம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், “ ரசிகர் ஒருவர் பான்பராக் வாயோடு ஊர்ப்பி ஜாவேத்திடம் செல்ஃபி எடுக்க அரக்கப்பரக்க ஓடோடி வருகிறார். இதனைப்பார்த்த அங்கிருந்த பத்திரிகையாளர்கள்... என்ன பாய்.. என்று கேட்க.. அட இருங்கப்பா..என்று கூறி.. வாயிலிருந்த பான் பாராக்கை புளிச் என்று துப்பிவிட்டு  நடிகையுடன் ஒட்டி நின்று செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்.


இவரது இந்த நடவடிக்கையை பார்த்த நடிகை, சிரித்துக்கொண்டே செல்ஃபி எடுக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவரால் கடைசி வரை சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


 


Upcoming movies: ஊரடங்கு தளர்வுகள்.. விரைவில் 100% இருக்கைகள்? தியேட்டர் ரிலீசுக்கு வரிசை கட்டும் திரைப்படங்கள்!