மலையாள நடிகர் மம்மூட்டி அவரது ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கும் இளமையான தோற்றத்துக்கும் பெயர் போனவர். இதை மீண்டும் ஒருமுறை தான் என்றும் இளமையானவர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவர் படித்த கல்லூரி ரீயூனியனில் தனது பேட்ச்மேட்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. தனது நண்பர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அவர் மட்டும் இளமையாகத் தோன்றுவதுதான் காரணம். அவரது ஃபேன் பேஜ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அவரது ரசிகர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர். ‘வயது என்பது வெறும் நம்பர்தான்’ போன்ற கருத்துகளை அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்,






மம்மூட்டி எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் தனது பி.ஏ. படிப்பை முடித்தார். எழுபது வயதான அவர் அண்மையில் தனது கல்லூரி நண்பர்களைச் சந்தித்தார். மலையாள சினிமா உலகில் 50 வருடங்களைக் கடந்துவிட்ட மம்மூட்டி இதுவரை அங்கே 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அண்மையில்தான் அவரது ப்ரிஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்ப்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.