தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போல் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார்களாக வலம் வருபவர்கள் மம்மூட்டி மற்றும் மோகன் லால். இவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அரசு, கோல்டன் விசாவை வழங்கி உள்ளது. திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


கோல்டன் விசா என்றால் என்ன?

குறுப்பிட்ட ஒரு சில நபர்களுக்கு நீண்ட கால குடியுரிமை வழங்குவதாகும். பொதுவாக விசா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். ஆனால் கோல்டன் விசா இருந்தால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 2019-ஆம் ஆண்டு கோல்டன் விசாவை அறிமுகம் செய்து வைத்தது.


ஐக்கிய அரபு அமீரகம் இந்த கோல்டன் விசாவை அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் சிறப்பான நடிகர்கள், நடிகைகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைத்துறை சேர்ந்தவர்களுக்கு கொடுப்பது வழக்கம். அமீரகத்தை சேர்ந்த குடிமக்களுக்கு நிகறாக, இந்த விசா வைத்திருப்பவர்கள் கருதப்படுகின்றனர். மேலும் சமீபத்தில் அமீரகத்தில் தங்கி பணியாற்றும் மருத்துவர்களும் கோல்டன் விசா விண்ணப்பிக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.


இவ்வாறு உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் விசா விருது மோகன் லால், மம்மூட்டிக்கு கிடைத்து இருப்பது மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் கோல்டன் விசா மூலம் முதல்முறையாக அடுத்த ஒரு சில நாள்களில் துபாய் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 


கடந்த ஆண்டு ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் அரச, கோல்டன் விசாவை  வழங்கியுள்ளது.  ஐக்கிய அரபு அமீரகம் இந்த கோல்டன் விசாவை அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டவர், நடிகர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைத் துறை சேர்ந்தவர்களுக்கு கொடுப்பது வழக்கம். 


இவ்வாறு உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் விசா விருது நடிகர்கள் மோகன் லால் மற்றும் மம்மூட்டிக்கு கிடைத்து இருப்பது மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் கோல்டன் விசா மூலம் முதல் முறையாக அடுத்த ஒரு சில நாள்களில் துபாய் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. கோல்டன் விசா விருது வென்ற இவர்களுக்கு திரைத்துறையை சேர்ந்தவர் பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.