"பரியேறும் பெருமாள்" மற்றும் "கர்ணன்" போன்ற ஹிட் திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "மாமன்னன்". உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாஃசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ஒளிப்பதிவு பணிகளை தேனி ஈஸ்வர் மேற்கொள்ள படத்தொகுப்பை செல்வா செய்ய எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் ஆர் கே.
அரசியல் சார்ந்த இப்படத்தில் நடிகர் வடிவேலு எம்.எல்.ஏ வாகவும், உதயநிதி ஸ்டாலின் அவரின் மகனாகவும் நடித்துள்ளனர். பஹத் பாஃசில் வில்லனாக நடித்துள்ள இப்படம், அரசியல்வாதிகளின் வாழ்க்கையை சுற்றி நகர்கிறதாக கூறப்படுகிறது. மாமன்னன் படப்பிடிப்பு செப்டம்பர் 18ம் தேதி முடிவடைந்தது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மிஷ்கின் காணப்பட்டதால், அவர் கேமியோ ரோலில் நடித்திருக்கலாம் என யூகிக்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 'மாமன்னன்' திரைப்படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர் என கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று அப்டேட் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது மாமன்னன் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் தோன்றி பேசியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் நான் மாரி செல்வராஜ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் முதல் படம் இது. மாரி செல்வராஜின் ஸ்டைல் புதுமையாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்க என்னுடைய வாழ்த்துகள்” என்று பேசியுள்ளார்.