‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம் பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்ற  ‘மல்லிப்பூ’ பாடல் வெளியானது.  


 


                                     


 


 


சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார்.


இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியான தியேட்டர்களில் வெளியானது. முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படம் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு படம் பிடித்திருந்தது. அதனால், எதிர்பார்த்தை போல படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. 


 






4 நாட்கள் முடிவில் வெந்து தணிந்தது காடு சுமார் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்தின் ஹைலைட்டாக பார்க்கப்பட்ட ஒன்று “மல்லிப்பூ” பாடல். கவிஞர் தாமரை எழுதிய இப்பாடலை  மது ஸ்ரீயின் மயக்க வைக்கும் குரலால் அனைவரையும் பாடல் கவர்ந்துள்ளது.


ஒருவகையில் படம் பார்க்க அனைவரையும் தூண்டும் விஷயமாகவும் இந்த பாடல் அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த நிலையில் இந்தப்பாடலின் வீடியோ எப்போது வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்தப்பாடல் இன்று இரவு 7 மணியளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.


 




முன்னதாக படம் பெரிய வெற்றியை பெற்றதற்காக படத்தில் நடித்த நடிகர் சிலம்பரசனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் டொயோட்டா காரும், இயக்குநர் கெளதம் மேனனும் ராயல் என்ஃபீல்டு பைக்கையும் பரிசாக கொடுத்தார்.