மல்லிகா ஷெராவத் :


பாலிவுட்டின் பிரபலமான நடிகை மல்லிகா ஷெராவத். தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது 45 வயதாலும் மல்லிகா ஷெராவத் நேர்காணல் ஒன்றில் பாலிவுட் ஆணாதிக்கம் நிறைந்தது என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.






இந்தியா முழுவதுமே ஆணாதிக்கம் நிறைந்ததுதான் :


”சினிமா துறையை எடுத்துக்கொண்டால் பெண்களை விட ஆண்களுக்கான வாய்ப்புகள்தான் அதிகம். அது அவர்களுக்கு எளிதாக கிடைத்துவிடுகிறது. ஆண்கள் ஆண்களுக்காகவே திரைக்கதையை எழுதுகின்றனர். இது பாலிவுட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் அப்படித்தான்.. நான் குறையாக சொல்லவில்லை. எப்படி சினிமா இயங்குகிறது என்பதை விளக்க முயற்சிக்கிறேன் அவ்வளவுதான். தற்போது ஓடிடி இருக்கிறது. அது பெண்களுக்கு திறமையை காட்டுவதற்கான ஒரு அதிர்ஷ்டமாகத்தான் பார்க்கிறேன். ஆனால் அதிலும் பெண்களை விட ஆண்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகத்தான் கிடைக்கின்றன.ஆண்களுக்கும் அவர்களுக்கான போராட்டங்கள் இருக்கின்றன. அதை நான் மறுக்கவில்லை ஆனால் பெண்களுடன் ஒப்பிடும்பொழுது எளிமையாகவே வாய்ப்புகள் கிடைக்கின்றது“ என்றார் மல்லிகா .






ஷோசியல் மீடியா குறித்து :


மல்லிகாவிடம் சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் குறித்து கேட்டபொழுது “எனக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது சுத்தமாக பிடிக்கவில்லை. நான் சமூக ஊடகங்களை வெறுக்கிறேன். அது உங்களின் ஆற்றலை அப்படியே உறிஞ்சுகிறது.வாழ்க்கையில் நடக்கும் அனைத்து தவறான விஷயங்களுக்கும் அதுதான் காரணம் . உங்களை அப்படியே அடிமையாக்கிவிடும். இக்கால குழந்தைகளுக்கு தொலைபேசியை கொடுப்பதை விட புத்தகத்தை கொடுப்பதுதான் சிறந்தது.


வெளியில் விளையாட வைக்க வேண்டும். உங்களுக்கு சமூக ஊடகங்களில் கணக்கு இருந்தால், நீங்கள் நல்லதை கெட்டதை ஏற்க வேண்டும். ட்ரோலிங் குறித்தெல்லாம் நீங்கள் புகார் செய்ய முடியாது. நீங்கள் உண்மையிலேயே புகார் செய்ய விரும்பினால், சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருக்க வேண்டாம். அதுதான் என் பார்வை” என பளீச் பதில் கொடுத்தார் மல்லிகா ஷெராவத்.