துபாயில் பிறந்தவர் அவந்திகா மோகன். இவர் கடந்த 2015 முதல் மலையாள படங்களில் நடித்து வருகிறார். யக்ஷி ஃபெய்த்ஃபுல்லி யுவர்ஸ் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகம் ஆனார்.  இதன்பின் துல்கர் சல்மான் உள்ளிட்டோரின் படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 5 திரைப்படங்கள், தமிழ் மற்றும் கன்னடத்தில் இரண்டு திரைப்படங்கள் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

Continues below advertisement

சர்ச்சையில் சிக்கிய நடிகை

வெள்ளித்திரையில் நிலையான இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் அசத்தி வருகிறார். சீரியல்களில் இவர் நடிக்காத கதாப்பாத்திரம் இல்லை. லீட் ரோல்களில் குடும்பத்தில் ஒருவராக இவரை கொண்டாடி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவந்திகா மோகன் பிகினி உடை மற்றும் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து வந்துள்ளார். பட விழா அல்லது கடை திறப்பு விழாக்களில் பங்கேற்கும்போது இவர் அணிந்து செல்லும் ஆடை விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இவரை பற்றிய கிசுகிசுக்களும் அதிகம் நடக்கின்றன. 

17 வயது பையனின் திருமண ஆசை

இந்நிலையில், நடிகை அவந்திகாவிற்கு 17 வயது சிறுவன் ஒருவன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த சிறுவனின் கோரிக்கைக்கு அவந்திகா அளித்திருக்கும் பதில் தான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், என் குட்டி ரசிகன் எனக் குறிப்பிட்டு  நீயும் சில நாட்களாக எனக்கு மெசேஜ் அனுப்பி வருகிறாய். நேர்மையாக உன்னிடம் ஒன்று சொல்கிறேன். 16 அல்லது 17 வயது சிறுவன் நீ. வாழ்க்கை என்னவென்று தெரியாது உனக்கு. 

Continues below advertisement

அவந்திகா மோகன் கொடுத்த அட்வைஸ்

 அதை புரிந்துகொள்ளும் வயதும் இல்லை. ஆனால், கடந்த ஒரு வருடமாக என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று துடிக்கிறாய். இதைத்தொடர்ந்து மேசேஜ் செய்து வருவதால் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். இப்போது நீ திருமணத்தை பற்றி யோசிக்காமல் உனது பள்ளி தேர்வுகளை பற்றி கவலைப்பட வேண்டும். என்னை விட குறைவான வயதுள்ள பையனாக இருக்கிறாய். நாம் திருமணம் செய்துகொண்டால், என்னை உன் மனைவியாக பார்க்க மாட்டார்கள். அம்மாவாக பார்ப்பார்கள். பள்ளி படிப்பில் கவனம் செலுத்து, ஆனால் உனக்கென்று ஒரு காதல் சரியான நேரத்தில் அமையும் என்று குறிப்பிட்டுளளார். இவரது பதிவை பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.