செப்டம்பர் முதல் வாரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. இதில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா ஆகிய இரு படங்கள் மக்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த படங்களை கடந்து ஹாலிவுட்டில் வெளியான ஹாரர் திரைப்படம் தி கான்ஜூரிங் இறுதி பாகம் உலகளவில் வசூலை வாரி குவித்து வருகிறது. 

Continues below advertisement

மதராஸி வசூல் 

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகியது. ஶ்ரீலக்‌ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் , பிஜூ மேனன் ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். மதராஸி திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ 50 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. அமரன் படத்தைத் தொடர்ந்து மதராஸி திரைப்படம் 100 கோடி வசூலை நோக்கி நகர்ந்து வருகிறது. 

Continues below advertisement

லோகா வசூல் 

துல்கர் சல்மான் தயாரிப்பில் பெண் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள லோகா திரைப்படம் ஓனம் பண்டிகைக்கு வெளியான மற்ற படங்களை திரையரங்குகளில் இருந்து விரட்டியடித்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் , நஸ்லென் போன்ற இளம் நடிகர்கள் நடித்துள்ள இப்படம் தமிழ் , மலையாளம் , இந்தி , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் அபரிமிதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. 30 கோடி பட்ஜெட்டில் உருவான லோகா திரைப்படம் இதுவரை உலகளவில் 160 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. விரைவில் படம் ரூ 200 கோடி வசூலை நெருங்க இருக்கிறது. 

கான்ஜூரிங் 4 வசூல் 

மதராஸி , லோகா ஆகிய படங்களைக் காட்ட்டிலும் கடந்த வாரம் வெளியான கான்ஜூரிங் 4 ஆவது பாகம் வசூல் மழையில் நனைந்து வருகிறது. ஹாரர் படங்களில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்பட்ட படம் தி கான்ஜூரிங். இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் 4 ஆவது மற்றும் இறுதி பாகமான கான்ஜூரிங் லாஸ்ட் ரைட்ஸ் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியானது. இப்படம் இந்தியாவில் மட்டும் 3 நாட்களில் ரூ 50  கோடி வசூலை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 22 நாடுகளில் இப்படம் வெளியாகி வசூலை வாரி குவித்து வருகிறது. உலகளவில் இப்படம் முதல் வாரத்தில் மட்டுமே  ரூ 1600 கோடிக்கும் மேல் வசூலித்து வசூல் சாதனை படைத்துள்ளது.