தமிழில் "பொதுநலன் கருதி" உள்ளிட்ட சில படங்களில் நடித்த, மலையாள திரையுலகின் பிரபல நடிகையான சித்தாரா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவானவர். இவர் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திறமைகளை வெளிப்படுத்தியும், ஃபோட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டும் வருவார். அப்படி இவர் கடந்த ரம்ஜான் பண்டிகையின் பொழுது "eid mubarak " என ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றினை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் அனு சித்தாரா இஸ்லாமிய பெண்போல உடை அணிந்திருந்தார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை தெறிக்கவிட்டனர்.




அதற்கு கீழே கமண்ட் செய்த ரசிகர் ஒருவர் "  மாறிவிட்டீர்களா?"  , அதாவது மதம் மாறிவிட்டீர்களா என்பதைப் போல் பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த அனு சித்தாரா " ஆம் மனிதனாக மாறிவிட்டேன்" என பதிலளித்திருந்தார். இந்த பதிலை வரவேற்ற அவரது ரசிகர்கள் சாட்டையடி பதில் எனக் கொண்டாடிவருகின்றனர்.

இதேபோல கேரளாவில் வெள்ளம் வந்த சமயத்தில்   நடிகை அனு சித்தாரா வெளியிட்டிருந்த  புகைப்படத்தில் ரசிகர் ஒருவர் " இந்த நடிகை வெள்ளத்துல சாகலயா?" என  பதிவிட்ட கமெண்டிற்கு , பதில் அளித்த சித்தாரா, "உங்களை போன்றவர்கள் இந்த உலகத்தில் வாழும் பொழுது, கடவுள் என்னை மட்டும் ஏன் அழைத்துக்கொள்ள போகிறார்" என தெரிவித்திருந்தார். இது தவிர அவ்வப்போது வரும் உடல் பருமன் குறித்த கருத்துகளையும் துணிச்சலாக எதிர்கொள்வர் அனு சித்தாரா.





அனு சித்தாரா  பிஸியான நடிகை என்பதை தாண்டி அவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட , தனது இண்ஸ்டாகிராம் பக்கதில்  நடன‌ங்கள் ஆடி பதிவிடுவதையும் அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அனு சித்தாரா நடிப்பில் விரைவில் வெளியீட்டிற்காக  "அனுராதா 59/2019" என்ற திரைப்படம்  விரைவில் வெளிவர இருக்கிறது. முழுக்க முழுக்க க்ரைம் திரில்லரை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் துளசி