திரைப்பட வாய்ப்புக் கேட்ட சென்ற இடத்தில் நடந்த மிக மோசமான சம்பவங்களை பிரபல மலையாள நடிகை மாளவிகா ஸ்ரீநாத் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மலையாளத்தில் மதுரம், சாட்டர்டே நைட் ஆகிய படங்களில் நடித்தவர் மாளவிகா ஸ்ரீநாத். இதன்மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இதற்கிடையில் திரையுலகில் இருக்கும் பெண்கள் தொடங்கி சாமானிய பெண்கள் வரை மீ டூ மூலம் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பொது வெளியில் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.


 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு படத்தில் மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க ஆடிஷன் நடிப்பதாக கேள்விப்பட்டேன். அப்போது எனக்கு சினிமாவில் எந்தவித தொடர்பும் இல்லை. அது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அவர்களை தொடர்புக் கொண்டு ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டேன்.  என் வீட்டுக்கு இன்னோவா கார் அனுப்பி திருச்சூரில் நடந்த ஆடிஷனுக்கு நான், என் அம்மா, சகோதரி 3 பேரும் சென்றிருந்தோம். உள்ளே படத்துக்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் நபர், கண்ணாடியால் செய்யப்பட்ட அறையில் அமர்ந்திருந்தார். அப்போது நான் உள்ளே சென்றேன். என் தலைமுடி கொஞ்சம் அலங்கோலமாக உள்ளது  கூறி, டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று சரிசெய்யச் சொன்னார்.



நானும் உள்ளே சென்று தலைமுடியை சரி செய்துக் கொண்டிருந்தபோது அந்த நபர் உள்ளே வந்து பின்னால் இருந்து என்னை கட்டிப் பிடித்தார். நான் அதிர்ச்சியடைந்தேன். பயத்தில் உடல் நடுங்கியது. நான் அவரைத் தள்ளிவிட முயன்ற நிலையில் என்னால் முடியாமல் போனது. அப்போது அந்த என்னிடம் வந்து, “நீ மனது வைத்தால் இந்த படத்தில் மஞ்சு வாரியரின் மகளாக இருப்பாய்” என சொன்னார். 


பின்னர் என் அம்மாவையும், சகோதரியையும் வெளியே இருக்க சொல்லி விட்டு 10 நிமிடம் உள்ளே இருக்க சொன்னார். ஆடிஷனை வீடியோவை பதிவு செய்ய முயன்ற சமயத்தில் நான் நடந்த சம்பவங்களை நினைத்து அழ ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் அந்த நபருடைய கேமராவைத் தட்ட முயற்சித்தேன். அவரின் கவனம் இதனால் திசை திரும்பிய நிலையில் அங்கிருந்து தப்பித்து விட்டேன் என தெரிவித்துள்ளார். பின்னர் தான் அந்த நபருக்கும் படக்குழுவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் மலையாள திரையுலக ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க:  Lakshmi Ramakrishnan: “அபிராமி சொன்னது முட்டாள்தனமான விஷயம்” - கலாஷேத்ரா விவகாரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம்