மலையாள திரையுலகின் ஒளிப்பதிவாளர்  கே.யூ. மோகனனுடைய மகள் மாளவிகா மோகனன். மலையாள நடிகையும், மாடலுமான மாளவிகா மோகனன் தமிழ் திரை உலகில் பேட்டை படம் மூலம்  அறிமுகமானாலும் அவருக்கு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்' படம்தான் ஹிட் படம். இந்தப் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன். அவர் தமிழில் நாயகியாக அறிமுகமான முதல் படமாக 'மாஸ்டர்' அமைந்திருந்தது. இது அவருக்கு மாறன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தது.


 இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது. பெரும் ஆளுமைகளுடன் பணிபுரியும் வாய்ப்பு, மிகச்சிறந்த வாழ்நாள் கால நண்பர்கள், இனிவரும் எனது வாழ்நாள் முழுவதும் அசைபோடவைக்கும் நிறைய நினைவுகள் என ஏற்கனவே இப்படம் நிறைய நல்ல அனுபங்களை கூறியிருந்தார்.


இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மாஸ்டர் படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். நேர்காணலில்,  “மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. இந்தி சினிமா உலகில் மாஸ்டர் திரைப்படம் ரொம்பவே பிரபலம். இந்தியா முழுவதும் மாஸ்டர் படம் நல்ல ஹிட். நான் ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது, நான் மாஸ்டர் படத்தின் கதாநாயகி என்று அறியப்பட்டேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டில் பெரும்பாலானவர்கள் மாஸ்டர் படத்தைப் பார்த்துள்ளனர். இளைய தளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தது எனக்கு பல வாய்ப்புகளைக் கொடுத்தது. அவர்களின் ரசிகர்களின் அன்பு என்னை திக்குமுக்காட வைக்கிறது. இளைய தளபதி விஜய் அவர்களின் ரசிகர்கள் அவர் மீது கொண்டிருக்கும் பேரன்பு எனக்கும் கிடைத்தது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் என் நன்றி.”எனத் தெரிவித்துள்ளார். 


மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் மாளவிகா பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார்.


மாளவிகா மோகனனுக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த மாஸ்டர் படம் முக்கியத்துவம் வாய்ந்ததும், மக்களிடையே நன்றாக அறிமுகமாவதற்கான் வாய்ப்பை வழங்கிய படம் ஆகும். மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரம் சிறப்பாக அமைய முயற்சி செய்திருப்பார். இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் ஆக்டீவான மாளவிகா அவ்வபோது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். அப்படியிருக்கும் மாளவிகா தனக்கு அளவில்லா அன்பை வழங்கிய இளைய தளபது விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


 


 


 


 


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண