Malavika Mohanan: தனுஷுடன் பெட் ரூம் சீன்... விவகாரமான கேள்விகேட்ட ரசிகர்.. பளேரென பதிலளித்த மாளவிகா!
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், விதவிதமான போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

பெட்ரூம் சீன் பற்றி கேட்ட ரசிகருக்கு கடும் பதிலடி கொடுத்த நடிகை மாளவிகா மோகனனின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதன்பின்னர் தளபதி விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததன் மூலம் ஒரு முன்னணி நடிகையானார். சமீபத்தில் தனுஷின் ‘மாறன்’ படத்தில் நடித்தார். அது ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. மோசமான விமர்சனங்களை சந்தித்தது. குறிப்பாக அந்தப் படத்தில் மாளவிகாவின் நடிப்பை நெட்டிசங்கள் ட்ரோல் செய்தனர்.
Just In




சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், விதவிதமான போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அத்துடன் ரசிகர்களுடன் அடிக்கடி கலந்துரையாடுவார். அதன்படி, சில தினங்களுக்கு தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார். அதில், நெட்டிசன்களின் பல கேள்விகளுக்கு பணிவுடன் அவர் பதிலளித்தார். அப்போது, ‘மாறன்’ படத்தில் தனுஷ் உடன் பெட்ரூம் சீன் நடிக்கும் எடுக்கும்போது எத்தனை டேக் எடுத்தீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா, “இந்தக் கேள்வியை பார்க்கும்போது உங்கள் மண்டைக்குள் இருக்கும் மோசமான எண்ணம்தான் தெரியவருகிறது” காட்டமாக கூறினார்.
வேண்டாத கேள்விக்கு மாளவிகா கூறிய பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாளவிகா தற்போது பாலிவுட் நடிகர்களான சித்தந்த் சதுர்வேதி மற்றும் ராகவ் ஜூயல் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் 'யுத்ரா' என்ற இந்திப் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்