Malavika Mohanan : வட இந்திய கிராமத்தில் நான் 'மாஸ்டர் ஹீரோயின்'.. நடிகர் விஜயின் மாஸ் குறித்து பேசிய மாளவிகா!

வட இந்தியாவில் விஜய் சாரின் புகழ் எந்தளவு பரவியுள்ளது என்பதை மாஸ்டர் படம் மூலமாக அறிந்து கொண்டேன் என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

Continues below advertisement

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தாலும், மாஸ்டர் படம் மூலமாக அவர் மிகவும் பிரபலமானார்.

Continues below advertisement

இந்த நிலையில், தற்போது இந்தி படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் நடிகர் விஜயை புகழ்ந்து அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது, அவர் அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ வட இந்தியாவில் உள்ள ஒரு குக்கிராமத்திற்கு நானும் எனது அம்மாவும் சென்றிருந்தோம். அங்கே இருந்த அந்த கிராமத்தினர் சிலர் என்னைப் பார்தது நீங்கள் மாஸ்டர் ஹீரோயின்தானே? என்று கேட்டனர்.


இந்தியில் நான் ஏற்கனவே பியோண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்திருந்தாலம், அவர்கள் என்னை மாஸ்டர் பட ஹீரோயினாகவே பார்க்கின்றனர். அப்போதுதான் விஜய் சாரின் புகழ் எந்தளவுக்கு உள்ளது என்று புரிந்துகொண்டேன். விஜய் சாருக்கு ஜோடியாக யார் நடித்தாலும், அவர்களை விஜய் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக வேற லெவலில் உள்ளது. மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்பும் விஜய் ரசிகர்கள் அளித்த மதிப்பும், மரியாதையும் எப்போதும் மறக்க முடியாது.  மாஸ்டர் படத்தில் விஜய் சாருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வரும் கே.யூ. மோகனனின் மகள்தான் மாளவிகா மோகனன். இவர் 2013ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமானார். பின்னர், கன்னடத்தில் நானு மாட்டு வரலக்ஷ்மி என்ற படத்தில் நடித்து கன்னடத்திலும் நடித்தார். தமிழில் பேட்ட மூலம் அறிமுகமானாலும், விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உயர்ந்தார். இந்த படத்திற்கு பிறகு தனுஷிற்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார்.


தற்போது மாளவிகா மோகனன் இந்தியில் உருவாகும் யுத்ரா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகனாக சித்தார்த் சதுர்வேதி நடித்து வருகிறார். ரவி உத்யவார் இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன் விஜய் மற்றும் சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை ஏற்கனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola