பாலிவுட்டில் சில தினங்களுக்கு முன்னர் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்த ஒரு செய்தி பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவின் 'யெஸ் சொன்னேன்' என்ற இன்ஸ்டா போஸ்ட். இந்த போஸ்ட் மூலம் மலாய்கா அரோரா - அர்ஜுன் கபூர் திருமணத்திற்கு  ‘யெஸ்’ சொல்லிவிட்டார் என்று யூகித்து அந்த செய்தி இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. பலரும் அவரின் அந்த இன்ஸ்டா பதிவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இணையத்தில் வைரலாக பரவி வந்த வதந்திக்கு, தற்போது பதில் கொடுத்துள்ளார் நடிகர் மலாய்கா அரோரா. 


 



பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த மலாய்கா அரோரா - அர்ஜுன் கபூர் காதல் திருமணத்தில் சேரவுள்ளது என மிகவும் மகிழ்ச்சியோடு இருந்த ரசிகர்களுக்கு மிகவும் தெளிவான ஒரு பதிலை கொடுத்துள்ளார் மலாய்கா அரோரா. 


 






 


தெளிவுபடுத்திய மலாய்கா அரோரா :


தற்போது புதிய பதிவு ஒன்றை வெளியிட மலாய்கா அரோரா நான்   'யெஸ்' சொன்னது அர்ஜுன் கபூருடன் திருமணம் செய்வதற்கு இல்லை என்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவிற்கும் புதிய நிகழ்ச்சி ஒன்றிற்கு என்றும் பதிலளித்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 'மூவிங் வித் மலாய்கா' எனும் புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்க போவதாகவும், அது மிகவும் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார்.


இதுவரையில் நீங்கள் காணாத ஒரு மலாய்காவை இந்த நிகழ்ச்சி மூலம் பார்க்க போகிறீர்கள். இந்த நிகழ்ச்சி மூலம் என்னுடன் நெருக்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் பழக்க முடியும். ரசிகர்களுடன் நெருங்கி பழக எனக்கு இந்த நிகழ்ச்சி மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதன் மூலம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரோடு இணைவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார் மலாய்கா அரோரா.