Malaika arora: ஒரே ஒரு நிமிஷம் போதும்.. ரிலாக்ஸ் ப்ளீஸ்.. மலைக்கா அரோரா சொல்லும் க்யூட் வழி.. என்னன்னு தெரியுமா?

எந்த இக்கட்டான நிலையிலும் மனதை ஒரு நிமிடத்தில் ரிலாக்ஸ் செய்வது குறித்து பிரபல நடிகை மலைக்கா அரோரா டிப்ஸ் வழங்கியுள்ளார்.

Continues below advertisement
மனிதர்கள் மேன்மையான நிலையை அடைய ஒரு உன்னதமான கலை உள்ளது என்றால் அது நம்முடைய பாரம்பரியமான கலை யோகாசனம். இந்த கலை 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து பழக்கத்தில் உள்ள பழமையான கலை. மனிதர்கள் மனதளவிலும், உடலளவிலும் நலமாகவும் வளமாகவும் இருப்பதற்காக சித்தர்கள் நமக்கு அளித்த இந்த கலை பல நன்மைகளை நமக்கு அளிக்கிறது. 
 
இன்று மாறிவரும் வாழ்க்கைத் தரத்தால் பல விதத்திலும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனால் நிம்மதியின்மை, ஆரோக்கியத்தில் சிக்கல் என பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இன்று நம்மை சுற்றி இருக்கும் அனைத்திலும் மாசு படிந்துள்ளது. நாம் சுவாசிக்கும் காற்று கூட சுத்தமானதாக இல்லை. இவை அனைத்தும் நம் உடல் நலத்திற்கு பல வகையில் தீங்கு விளைவிக்கின்றன, 
 
யோகா மூலம் இவை அனைத்திலும் இருந்து எளிதாக நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். மனஅழுத்தம், இதயம் சம்பந்தமான நோய்கள், சர்க்கரை வியாதி, மூச்சு திணறல், மன சோர்வு, ஆஸ்துமா, அலர்ஜி, தூக்கமின்மை, அஜீரண கோளாறு, வயிற்று உபாதை, வாயு தொல்லை, ரத்த கொதிப்பு என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும். மூளைக்கு செல்லும் நரம்பு மண்டலங்கள் பலம் பெறுவதால் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். வளைந்து நெளிந்து யோகாசனம் செய்வதால் உடல் பலம் பெறுவதோடு வசீகரமாகவும் இருக்கும். 
 
 
ஹாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு யோகாசனம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த 1 நிமிடத்தில் செய்யக்கூடிய ஆசனம் மூலம் மனஅழுத்தத்தை எளிதில் குறைக்க முடியும் என்று கூறுகிறார். இது மனதையும், உடலையும் அமைதி படுத்த முடியும். இதில் உள்ள பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் இந்த ஆசனத்தை ஒரு நாளில் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் செய்யலாம். 
 
தினமும் யோகாசனம் செய்வதால் அந்த நாள் மிகவும் அமைதியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். எந்த ஒரு செயலை செய்தாலும் பதட்டம் இல்லாமல் அமைதியாகவும் பொறுமையுடனும் செய்யமுடியும். மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்களை யோகாசனம் செய்ய ஊக்குவிக்கிறார். எப்போதெல்லாம் மன சோர்வையும், மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் உணரும் போது இந்த ஒரு நிமிட ஆசனத்தை உடனே செய்து உங்களை ரீசார்ஜ் செய்து புத்துணர்ச்சியோடு உணருங்கள். 
 
நமது மனமும், உடலும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியோடும் இருந்தாலே நம்மை எந்த ஒரு வியாதியும் அண்டாது. முறையான உணவு முறைகளை பின்பற்றி தினந்தோறும் சில நிமிடங்கள் யோகாசனம் செய்வதாலேயே நம்மை முழுமையாக பலப்படுத்த முடியும்.
 
Continues below advertisement
Sponsored Links by Taboola