பிறந்தநாள் பார்ட்டியில் இந்தி நடிகை மலைகா அரோரா டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய மலைகா அரோரா, மாடலிங் உலகில் நுழைந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 1998 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய தில் சே (தமிழில் உயிரே) படத்தில் ‘தைய தையா’ பாடலுக்கு நடனம் ஆடினார்.இதன்மூலம் ஒட்டுமொத்த திரையுலகுக்கும் பிரபலமானார் மலைகா அரோரா.
இவர் 1998 ஆம் ஆண்டு நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் இருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூரை காதலித்த நிலையில், 2019 ஆம் ஆண்டு அர்ஜீனின் பிறந்தநாளில் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். இந்த ஜோடி தங்கள் தனிப்பட்ட தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கடும் விமர்சனங்களை சந்திக்கும். இதற்கு காரணம் அர்ஜூன் மலைக்கா அரோராவை விட 12 வயது சிறியவராவார்.
இந்த திருமண வாழ்க்கை நன்றாக இருக்கிறது என முன்னதாக நேர்காணல் ஒன்றில் அர்ஜூன் கபூருடனான உறவு குறித்து மலைகா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அர்ஜூன் கபூர் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த பிறந்தநாளை மேலும் சிறப்பாகும் வகையில் மலைகா ஒரு பெரிய பார்ட்டி ஒன்றை நடத்தினார். அர்ஜுன் வீட்டில் நடந்த இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மலைகா தான் மிகவும் புகழ் பெற காரணமாக இருந்த ‘தைய தையா’ பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.