மூத்த திரைப்பட தயாரிப்பாளர் சத்யன் அந்திகாட்டின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் மகள். இந்தப் படம் ஏப்ரல் 29 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பு, படக்குழு படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. ஜெயராம், மீரா ஜாஸ்மின் மற்றும் தேவிகா சஞ்சய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மகள் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் டிரெய்லரும் அதையே உறுதிப்படுத்துகிறது.
நடிகர்கள் ஜெயராம் மற்றும் மீரா ஜாஸ்மின் ஒரு டீன் ஏஜ் மகளுக்கு பெற்றோராக இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் அவர்கள் மதம் மாறித் திருமணம் செய்த ஜோடியகக் காட்டப்படுகிறார்கள். குடும்பத்தலைவர் ஜெயராம் துபாயில் இருந்து திரும்பி சொந்த ஊருக்கு வந்த பிறகு ஊறுகாய் வியாபாரத்தில் இறங்குகிறார் என்பது போல டீசர் விளக்குகிறது. இப்படத்தில் மீரா ஜாஸ்மினின் தம்பியாக சித்திக் நடிக்கிறார்.
சத்யன் அந்திகாட் இயக்கிய இந்தப் படத்தின் கதையை டாக்டர் இக்பால் குட்டிபுரம் எழுதியுள்ளார். மேலும் மகள் படத்திற்கு எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், கே ராஜகோபால் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். விஷ்ணு விஜய் இசையமைக்க, ராகுல் ராஜ் பின்னணி இசையமைத்துள்ளார். ஹரிநாராயணன் படத்துக்கான பாடலை எழுதியுள்ளார்.
இதற்கிடையில், சிறிது காலத்திற்குப் பிறகு மீரா ஜாஸ்மின் மீண்டும் இந்தப் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து. அவர் கடைசியாக 2018ல் அப்ட்ரிட் ஷைன் இயக்கிய காளிதாஸ் ஜெயராம் உடனான பூமரம் படத்தில் நடித்தார்.
மேலும், நடிகர் ஜெயராம் ஏற்கெனவே மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் த்ரிஷா ஆகியோருடன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் கல்வி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலைக் கொண்டு உருவாகி வருகிறது. சோழ வம்சத்தின் அரசனான முதலாம் ராஜராஜ சோழனின் கதையை இது விவரிக்கிறது.