அஜய் தேவ்கனின் 'மைதான்' படத்துக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந் நிலையில், இந்த படம் தற்போது திரையரங்குகளுக்கு வர தயாராகிவிட்டது. கடந்த ஆண்டு 'மைதான்' படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே, திரையரங்குகளில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் படம் வெளியாவதில் சிக்கல் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படத்த்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 


'மைதான்' படத்தின் ட்ரைலர் 


'மைதான்' படத்தின் டிரெய்லர் தொடங்கும் காட்சியில், கால்பந்து மைதானத்தில் அஜய் தேவ்கன் இருக்கின்றார். இந்தியா சுதந்திரம் அடைந்து சில வருடங்களுப்பின் இந்த படத்தின் கதை தொடங்குகிறது. வாய்ஸ் ஓவரில் - 'நாம் மிகப்பெரிய நாடும் இல்லை, பணக்காரர்களும் இல்லை, உலகம் முழுவதும் கால்பந்து விளையாடுவதால் கால்பந்திலும் நம் அடையாளத்தை உருவாக்க முடியும்’ என வருகின்றது



மைதான் படத்தின் கதை என்ன?


அஜய் தேவகன் கதாபாத்திரத்தின் பெயர் எஸ். ஏ. 'ரஹீம்'. நவீன இந்திய கால்பந்தின் சிற்பி என்று அழைக்கப்படும் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து 'மைதான்' உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அஜய் தேவ்கன், ரஹீமின் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ரஹீம் சாப் என்று அழைக்கப்படும் சையத் அப்துல் ரஹீம், ஒரு கால்பந்து வீரராகவும், 1950 முதல் 1963 வரை இந்திய தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும், மேலாளராகவும் இருந்துள்ளார்.


அவரது வழிகாட்டுதலின் கீழ், இந்திய அணி இரண்டு முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றது மற்றும் 1956 ஒலிம்பிக்கில் அரையிறுதியில் விளையாடியது. அந்த நேரத்தில், இந்தியா கால்பந்து விளையாட்டிற்காக ஆசியாவின் பிரேசில்' என்று அழைக்கப்பட்டது. 1962ல், ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியிடம், 'நாளை உங்களிடமிருந்து எனக்கு ஒரு பரிசு வேண்டும் நண்பர்களே... நாளை நீங்கள் தங்கம் வெல்லுங்கள்' என்று கூறியிருந்தார்.


மேலும் இந்திய அணி தங்களை விட பலம் வாய்ந்ததாக கருதப்பட்ட தென்கொரிய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. லீக் கட்டத்தில் தென்கொரியா அணியிடம் இந்தியா 2-0 என தோல்வியடைந்தது. ரஹீம் சாப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1963-ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு இந்தியாவில் கால்பந்து நலிவடையத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.


தயாரிப்பாளர் போனி கபூர், தனது பேட்டிகளில், அஜய்யின் இந்த நடிப்பை சிறந்த நடிப்பு என பாராட்டியுள்ளார்.  படத்தில் இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்காக ரஹ்மான் விருதுகளை வெல்லப் போகிறார் என்று போனி கபூர் கூறியுள்ளார்.