தெலுங்கில் திரையுலகின் ‘பிரின்ஸ்’ என அழைக்கப்படும் நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் காலமானார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபுவின் தாயாரும், முந்தைய சூப்பர் ஸ்டாரான் கிருஷ்ணாவின் மனைவியுமான இந்திராதேவி வயோதிகம் காரணமாக காலமானார். அவருக்கு வயது 70. அஞ்சலி செலுத்த வருவோருக்காக அவரது உடல் பத்மாலாய ஸ்டியோஸில் காலை 9 மணியிலிருந்து இரவு 12 மணி வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா தேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஹைதராபாத் மகாபிரஸ்தானத்தில் வைத்து நடைபெறுகிறது. அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில், நடிகர்கள் சிரஞ்சீவி, இயக்குநர் பாபு உள்ளிட்ட பலர் இரங்கல் பதிவுகளை வெளியிட்டு இருக்கின்றனர்.
இது குறித்து சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், “ இந்திராதேவி அவர்கள் இறந்த செய்தி கேட்டு நான் மிகவும் சோகமடைந்தேன். அவரது ஆத்மா சாந்தியடைய நான் இறைவனை பிராதித்துக்கொள்கிறேன். சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, சகோதரர் மகேஷ்பாபு ஆகியோருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
அதே போல மகேஷ்பாபுவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
கிருஷ்ணா - இந்திராதேவி தம்பதிக்கு பத்மாவதி, மஞ்சுளா, பிரியதர்ஷினி என மூன்று மகள்களும், மகேஷ்பாபு என்ற மகனும் உள்ளனர். மூத்த மகன் ரமேஷ்பாபு கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார்.