டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் மகேஷ் பாபு , ஜூனியர் என்.டி.ஆர். இரு பெரும் சினிமா தலைக்கட்டுகளும் அண்மையில் ஒரே நிகழ்ச்சியில் சந்தித்தது அவர்களது ரசிகர்களை குஷிப்படுத்தியது. உங்களில் யார் கோடீஸ்வரன் என்னும் நிகழ்ச்சி தெலுங்கில் ’எவரு மீலோ கோடீஸ்வருலு’ என ஒளிபரப்பாகிறது. இதனை ஜூனியர் எம்.டி.ஆர் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மகேஷ் பாபு கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இரண்டு முன்னணி நடிகர்களும் தங்களின் திரைப்பயணம் , வேலை , இசை என பல சுவாரஸ்யங்களை நிகழ்ச்சியின் போது பகிர்ந்துக்கொண்டனர். குறிப்பாக மகேஷ்பாபு தனது மகள் சிதாரா பற்றி பேசியது பலரின்  கவனத்தை ஈர்த்தது.







கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் போது , மகேஷ் பாபுவிடன் “உங்கள் மகளை குறித்து பகிர்ந்துக்கொள்ளுங்கள் ?” என கேட்டார் ஜூனியர் என்.டி.ஆர். அதற்கு மகேஷ் பாபு “ எனது மகள் ஒவ்வொரு படிநிலைகளை அடையும் பொழுதும் எங்கள் இருவருக்குமான பந்தம் வேற்பட்டுக்கொண்டே செல்கிறது. அவள் 1-3 வயதில் இருக்கும் பொழுது வேறு பிணைப்பு இருந்தது. 3- 5 வயதில் வேறு பிணைப்பு இருக்கிறது. மகள்கள் வளர வளர அப்பாக்கள் தங்கள் தகுதிகளை உயர்த்த வேண்டும் .இதற்கு ஜூனியர் என்டிஆர், "பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்களை பார்த்து நான் பொறாமைப்படுகிறேன்" என்றார். உடனே மகேஷ் பாபு “நீயும் பெற்றுக்கொள் “ என கூற அரங்கமே ஆராவாரத்துடன் கைக்கொட்டி சிரித்தது. ஆணோ, பெண்ணோ தந்தையாக இருப்பதே சிறப்புதான் என கூற அதனை ஒப்புக்கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் இருந்தாலும் எனக்கு பெண் குழந்தைகள்தான் பிடிக்கும் என்றார்.






முன்னதாக ராம் சரண், சமந்தா ரூத் பிரபு, எஸ்எஸ் ராஜமௌலி மற்றும் கொரட்டாலா சிவா உள்ளிட்டோர் ஜூனியர் என்.டி.ஆர் நடத்தும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஜூனியர் என்.டி.ஆர் , ராம் சரண் கூட்டணியில் , ராஜமௌளி இயக்கும் பிரம்மாண்ட படமான ஆர்.ஆர்.ஆர் படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.