வித்தியாசம் எதுவும் தெரியுதா... மகேஷ் பாபு வின் நியூ லுக் பகிர்ந்த  மனைவி!


டோலிவுட்டில் பெரிதும் கொண்டாடப்படும் ஜோடிகளில் மகேஷ் பாபு - நர்மதா ஸ்ரீரோத்கருக்கு என்றுமே முதல் இடம் தான்.


தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் மகேஷ் பாபு, அவரது காதல் மனைவி நடிகை நம்ரதா ஸ்ரீரோத்கர் இருவரது புகைப்படங்கள் இணையத்தில் ஏக பிரபலம்.


2005ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.


 






திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகினாலும், சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை நம்ரதா, தொடர்ந்து தங்கள் குடும்பப் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.


அந்த வகையில் முன்னதாக தன் கணவர் மகேஷ் பாபுவின் புது லுக் குறித்து நம்ரதா பகிர்ந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.


’ஸ்மோக்கிங் சூப்பர் ஸ்டார்’ என மகேஷ் பாபுவைக் குறிப்பிட்டு இந்தப் புகைப்படத்தை நம்ரதா பகிர்ந்துள்ளார்.


 






முன்னதாக மகேஷ் பாபு  நடிப்பில் ’சர்க்காரு வாரி பாட்டா’ படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றிபெற்ற நிலையில், எஸ். எஸ். ராஜமவுலி, த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகிய இயக்குநர்களுடன் பணியாற்றுகிறார்.