Mahesh Babu : புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தொடங்கியாச்சு... வைரலாகும் மகேஷ் பாபு ஸ்ரீலீலா நடனமாடி அசத்தியுள்ள பாடல்

மகேஷ் பாபு நடித்து உருவாகியுள்ள குண்டூர் காரம் படத்தின் பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது

Continues below advertisement

குண்டூர் காரம்

சர்காருவாரி திரைப்படத்தைத் தொடர்ந்து  குண்டூர் காரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் அருகில் ஜன்வாடாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக பூஜா ஹெட்கே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு பின் அவர் படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.தற்போது  இந்தப் படத்தில் மகேஷ் பாபுவிற்கு கதாநாயகியாக இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

Continues below advertisement

பூஜா ஹெட்கே நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீலீலா என்பவரும் இரண்டாவது கதாநாயகியான மீனாக்‌ஷி செளத்ரியும் நடிக்க இருக்கிறார்கள். குண்டூர் காரம் படத்தின் முதல் பாடலான குர்ச்சி மடதபெட்டி பாடல் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. முன்னதாக இந்தப் படத்தில் இருந்து தம் மசாலா என்கிற பாடல் வெளியாகிய நிலையில் தற்போது இந்தப் பாடல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சாஹிதி சகந்தி ஸ்ரீகிருஷ்ணா உந்த பாடலை பாடியுள்ளார்கள். குத்துப் பாடலாக இடம்பெற்றுள்ள இந்த பாடலில் மகேஷ் பாபு மற்றும் ஸ்ரீலீலா குத்தாட்டம் போடு காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த ஆண்டு முடியும் தருவாயில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

Continues below advertisement