டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களை தன் பிடியில் வைத்திருக்கும் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. அவரின் எக்ஸ்பிரஷன் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தாலும் அது அனைத்தும் கடந்து அவரின் படங்கள் நல்ல வசூலை ஈட்டும். அந்த வகையில் சமீபத்தில் த்ரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான 'குண்டூர் காரம்' மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானலும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. இருப்பினும் அப்படத்தில் இடம் பெற்ற குர்ச்சி மடத்தப்பெட்டி பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்று ட்ரெண்டிங்கானது. 


 



மகனை நினைத்து பெருமிதம்:


சினிமாவில் எந்த அளவுக்கு பிஸியாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவு செய்ய தயங்குவதே இல்லை. அடிக்கடி குடும்பத்துடன் வேர்ல்ட் டூர் சென்று அதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளிவிடுவார். அந்த வகையில் தற்போது தனது மகனை நினைத்து பெருமையுடன் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


நடிகர் மகேஷ் பாபு மகன் கௌதம் கட்டமனேனி, ஹைதராபாத்தில் உள்ள மிகவும் பிரபலமான பள்ளியான ஹைதராபாத் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் ஹைதராபாத்தில் (ISH) பள்ளி படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். மகனின் பட்டமளிப்பு விழாவில் மனைவி நம்ரதா ஷிரோத்கர் மற்றும் மகள் சித்தாராவுடன் கலந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் தன்னுடைய எண்ணங்களை ஒரு பதிவாக பகிர்ந்துள்ளார். அவரின் இந்த போஸ்ட் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


 



வாழ்த்துகள் மகனே:


"என் இதயம் பெருமிதத்தால் வெடிக்கிறது! உன் பட்டப்படிப்புக்கு வாழ்த்துகள், மகனே! உன்னுடைய அடுத்த அத்தியாயத்தை நீ எழுத வேண்டும், மேலும் நீ முன்னெப்போதையும் விட பிரகாசமாக பிரகாசிப்பாய் என்று எனக்குத் தெரியும். உன்னுடைய கனவுகளைத் துரத்திக்கொண்டே இரு, நீ  எப்போதும் நேசிக்கப்படுகிறாய் என்பதை நினைவில் வைத்து கொள்! இன்று நான் ஒரு பெருமைமிக்க தந்தையாக உணர்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


அதே போல மகேஷ் பாபுவின் மனைவியும், கவுதமின் தாயுமான நம்ரதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தார். என் அன்பான ஜிஜி, நீ உன் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும்போது, நான் உன்னை பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்பதை நீ அறிய விரும்புகிறேன். உனக்கு  உண்மையாக இரு, நீ உன்னுடைய உணர்வுகளைப் பின்பற்று, உன்  கனவை  ஒருபோதும் இழக்காதே. நான் உன்னை எவ்வளவு நம்புகிறேனோ அதே அளவுக்கு உன்னை நீ நம்பு. வாழ்க்கை உன்னை எங்கு அழைத்துச் சென்றாலும், உனக்கு என் அன்பும் ஆதரவும் எப்போதும் இருக்கும் என்பதை அறிந்து கொள். உனக்கு பெருநாள் வாழ்த்துகள். இந்த உலகம் உன்னுடையது. நான் உன்னை மிக மிக நேசிக்கிறேன்" என பதிவிட்டு இருந்தார் மகேஷ் பாபு மனைவி நம்ரதா.