எந்த பிரபலம் என்ன கார் வைத்திருக்கிறார் என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு 5.4 கோடி மதிப்புடைய ரேஞ்சு ரோவர் சொகுசு காரை வாங்கியுள்ளார். இந்த காரின் புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.


தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. தற்போது குனடூர் காரம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தை குறித்தான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கும் சூழலில் தற்போது மகேஷ் பாபு வாங்கியுள்ள கார் தகவல் ஒன்று சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.


அண்மையில் மகேஷ் பாபு புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு சுமார் 5.4 கோடி எனவும் தெலுங்கு திரையுலகில் இந்தக் காரை வைத்திருப்பவர் மகேஷ் பாபு ஒருவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.


ரேஞ்சுரோவர்


ரேஞ்சுரோவர் எஸ்வி என்கிற இந்த சொகுசு காரின் மதிப்பு ரூ.5.4 கோடி. ஏற்கனவே. இதே மரேஞ்சு ரோவர் காரை மோகன்லால், ஜூனியர் என்.டி. ஆர் சிரஞ்சீவி ஆகியவர்களிடம் இருக்கிறது என்றாலும் மகேஷ் பாபு தற்போது சொந்தமாக்கி இருக்கும் இந்த கோல்டன் ரேஞ்சு ரோவர் மிகவும் அரிய வகை மாடல் என்றும் ஹைதராபாத்தில் இந்த மாடலை வைத்திருப்பவர் மகேஷ் பாபு மட்டுமே என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தர்போதைய நிலவரத்தின்படி இந்திய சந்தையில் மிகவும் விலை உயர்ந்த கார் இந்த ரேஞ்ச்ரோவர்.  தற்போது இந்தக் காரின் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


மகேஷ்பாபு


சர்காருவாரி திரைப்படத்தைத் தொடர்ந்து  குண்டூர் காரம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் மகேஷ் பாபு. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் அருகில் ஜன்வாடாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக பூஜா ஹெட்கே கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு பின் அவர் படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.தற்போது  இந்தப் படத்தில் மகேஷ் பாபுவிற்கு கதாநாயகியாக இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. பூஜா ஹெட்ஜே நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீலீலா என்பவரும் இரண்டாவது கதாநாயகியான மீனாக்‌ஷி செளத்ரியும் நடிக்க இருக்கிறார்கள்.


மீனாக்‌ஷி செளதரி


இச்சட்டா வாஹனமுலு நிலுபரடு என்கிறத் திரைப்படத்தின் வழியாக தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானார் மீனாக்‌ஷி. 2020 ஆம் ஆண்டு வெளியான ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ஹிட் 2 படத்தின் நடித்தார் பரவலான வரவேற்பைப் பெற்றார் பின் அவுட் ஆஃப் லவ் என்கிற இணைய தொடரில் நடித்தார்.