அஜித்துக்கு ‘தல’ என்று பெயர் வைத்தவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.
நடிகர் அஜித் குமாரை இருபது ஆண்டுகளாக ரசிகர்கள் தல அஜித் அல்லது வெறுமனே தல என்று அன்புடன் அழைத்து வந்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தீனா’ படத்தில்தான் அஜீத்தை முதலில் தல என்று அழைத்ததாகவும், அதை அவருடன் படத்தில் நடித்த ‘மகாநதி’ ஷங்கர் வாய்மொழியாக கூறியதாகவும் முருகதாஸ் தெரிவித்திருந்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஷங்கர் அஜித்துடன் இணைந்து ‘ஏகே 61’ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகைச்சுவை கலந்த ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அஜித் தனது பெயருக்கு முன்பு தல என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தார். இதுதொடர்பாக அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ‘இனிமேல் நான் அஜித், அஜித் குமார் அல்லது வெறும் ஏகே என்று குறிப்பிட விரும்புகிறேன். மேலும் என் பெயருக்கு முன் 'தல' அல்லது வேறு எதுவும் இல்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி, மன அமைதி மற்றும் மனநிறைவு நிறைந்த ஒரு அழகான அன்பான வாழ்க்கையை கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்” குறிப்பிட்டிருந்தார்.
'ஏகே 61' படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும், படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது, மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அது விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்