தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். தமிழ் சினிமாவில் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிக்கும் சிலர் நடிகர்களுள் விக்ரமும் ஒருவர். விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான சில படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. 


இந்நிலையில் தனது மகனுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.விக்ரம் மற்றும் அவரது மகன் இருவருக்குமான நெருக்கம் அப்பா- மகன் என்பதை தாண்டி நண்பர்களை போன்றது. இவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரியை கண்டு கோலிவுட்டே வியந்திருக்கிறது. துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்னும் ரீமேக் திரைப்படத்தில் அறிமுகமானார்.


படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் , துருவ் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அப்பா மகன் காம்போவின் மகான் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ் . இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானது. இந்த படத்தை  7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார்  தயாரித்துவருகிறார், படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.






 


படம் முன்பே ஒடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகான் திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது






மகான் திரைப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரமுடன் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். படத்தில் ஏகப்பட்ட சஸ்பெண்ட் எலெமண்ட்ஸை சேர்த்திருக்கிறாராம் இயக்குநர்.இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. மகான் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மகான் படத்தில் விக்ரம் நெகட்டிவ் ரோலில் நடிக்க, சீன கலைகள் அறிந்த காவல்துறை அதிகாரியாக வலம் வர இருக்கிறாராம் அவரது மகன் துருவ் விக்ரம். படத்தில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ் விஷயம் இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை என்பதால். மகான் திரைப்படத்தை நம்பியிருக்கிறாராம். இந்த திரைப்படம் சிறந்த கம்பேக்காக அமைய வேண்டும் என்பதே அவரின் எண்ணமாகவும் இருக்கிறது.