விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. த்ரிஷா , அர்ஜூன் , ஆரவ், ரெஜினா என பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளார்.
லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் முன்னதாக வெளியான இந்தியன் 2 , வேட்டையன் , ஆகிய படங்கள் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை இந்த படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தை விடாமுயற்சி படம் ஈடு செய்யுமா என்கிற கேள்வி ஒரு புறம் இருந்து வருகிறது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வெளியாகியுள்ளன. முழுக்க முழுக்க மாஸ் படமாக இல்லாமல் கதையுடன் ஒன்றிய படமாக உருவாகியுள்ள விடாமுயற்சி. இதில் ரசிகர்கள் நிறைய குறைகளை சுட்டிக்காட்டி இருந்தாலும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் வந்தபடி தான் இருக்கின்றன.
விடாமுயற்சி வசூல்
விடாமுயற்சி படம் உலகளவில் இதுவரை 117 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. முதல் வாரத்தில் சீராக அதிகரித்த படத்தின் வசூல் இரண்டாம் வாரத்தில் சரிந்துள்ளது. அதிகபட்சமாக இரண்டாம் வாரம் வரை விடாமுயற்சி திரையரங்கில் தாக்குபிடிக்கும் என எதிர்பார்க்கலாம் .
அஜித்தின் தலையீடு இருந்ததா
த்ரில்லர் கதைகளை தனக்கே உரிய ஸ்டைலில் சிறப்பாக இயக்கக் கூடியவர் மகிழ் திருமேனி. ஆனால் விடாமுயற்சி படத்தில் அவரது பலமாக கருத்தப்பட்ட த்ரில் அம்சம் இல்லாததே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அஜித் தேர்வு செய்து அதை மகிழ் திருமேனியை இயக்க சொன்னது தான் இப்படம். பெண்களின் நிலையை பேசும் ஒரு படத்தை அஜித் நடிக்க விருப்பப் பட்டு இந்த கதையை அவர் தேர்வு செய்துள்ளார். ஆனால் படத்தின் திரைக்கதையில் அஜித்தின் தலையீடு இருந்ததால் மகிழ் திருமேனியால் படத்தை தனக்கு பிடித்த மாதிரி எடுக்க முடியவில்லை என நெட்டிசன்கள் கூறியுள்ளார்கள். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசையில் மகிழ் திருமேனி இப்படி கூறினார் " விடாமுயற்சி படம் ஒரு கூட்டு முயற்சி. இதில் என்னுடைய கருத்துக்கள் கொஞ்சம் இருந்தது. அஜித் சாரின் கருத்துக்களும் இருந்தன. இது முழுக்க முழுக்க என்னுடைய படம் கிடையாது. அதேமாதிரி இது முழுக்க முழுக்க அஜித் சாரின் படமும் இல்லை. " என மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்