விதிகளை மீறி பெரியார் பேருந்து நிலையத்தின் பிரதான பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பைக் ரேஸ் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது.


மதுரையில் கோட் திரைப்படம் வெளியீடு


விஜய்யின் ' தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ளது. இது உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச பாக்ஸ் ஆபிஸிலும், பிரமாண்ட டிக்கெட் முன்பதிவை பெற்றுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே தமிழ் சினிமாவுக்கான முன்பதிவில் புதிய பென்ச் மார்க்கை நிறுவியுள்ளதோடு, இதுவரை இல்லாத புதிய வசூல் சாதனையை நோக்கி தி கோட் திரைப்படம் பயணித்துக் கொண்டுள்ளது. அண்டை மாநிலங்களில் அதிகாலையிலேயே படம் வெளியானாலும், தமிழ்நாட்டில் காலை 9 மணியளவில் தான் படம் வெளியானது. சமூக வலைதளங்களில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பகிரப்படுகின்றன. இருப்பினும், இது படத்தின் முதல் நாள் வணிகத்தை பாதிக்கப் போவதில்லை. 'GOAT' தனது முன்பதிவு வணிகத்தின் மூலம் உலகளவில் சுமார் ரூ.62 கோடியை பதிவு செய்துள்ளது. இதில் ரூ.30 கோடி (கிராஸ்) (பிளாக் செய்யப்பட்ட இருக்கைகள் உட்பட) இந்தியாவில் இருந்து மட்டுமே என வர்த்தக இணையதளமான Sacnilk தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள கோட் திரைப்படம் இன்று திரையரங்கம் முழுவதிலும் வெளியிடப்பட்ட நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் திரையரங்கம் முன்பாக உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


- The GOAT Review: கொதிக்கும் ”The GOAT" ஜுரம்.. தெறிக்கவிட்டாரா விஜய்? முழு விமர்சனம் இதோ..


விஜய் ரசிகர்கள் ரத்ததானம் வழங்கி கோட் படத்தை கொண்டாடி வரவேற்றனர்


கோட் படம் வெளியாகிய நிலையில் கொண்டாட்டங்களுக்கு வேண்டாம் என விஜய் அறிவுறுத்திய நிலையில் மதுரை ரசிகர்கள் கே.கே நகர் பகுதியில் உள்ள சினிப்பிரியா திரையரங்கில் ஏராளமான விஜய் ரசிகர்கள் ரத்ததானம் வழங்கி கோட் படத்தை கொண்டாடி வரவேற்றனர். 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் ரத்ததானம் வழங்கினர். காலை முதலே படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் ரத்ததானம் வழங்கினர். 


போக்குவரத்து விதிகளை மீறல்


மதுரை புறநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் கல்லாணை ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த ரத்த தான முகாமில், ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர். திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக பெரியார்பேருந்து நிலையம் பகுதியில் விஜய் ரசிகர்கள் ஹெல்மெட் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி பெரியார் பேருந்து நிலையத்தின் பிரதான பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்டனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பைக் ரேஸ் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - The GOAT Twitter Review: தெறிக்கவிட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா விஜய்...தி கோட் பட ட்விட்டர் விமர்சனம்


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Teachers Day 2024 Wishes: செப்.5 - ஆசிரியர் தினம்; அன்பாசிரியர்களுக்கு வாழ்த்து, பரிசளிக்க சில டிப்ஸ்!