மடோனா செபாஸ்டியன்


பிரேமம் படத்தின் மூலமாக தென் இந்திய ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் மடோனா செபாஸ்டியன். நலன் குமாரசாமி இயக்கிய காதலும் கடந்து போகும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கவன், வானம் கொட்டட்டும், உள்ளிட்டப் படங்களில் நடித்தார்.  நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு லியோ படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருந்தார். கேரள மாநிலத்தில் கன்னூரை சொந்த ஊராகக் கொண்டவர் மடோனா.


ஆரம்பகாலத்தில் சூர்யா டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.மேலும் சின்ன வயதிலிருந்தே கர்நாடக இசையில் அவருக்கு நல்ல பயிற்சி இருந்த காரணத்தினால் திரைப்படப் பாடல்கள் சிலவற்றையும் பாடியிருக்கிறார் மடோனா. சூர்யா டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியபோது அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிரேமம் திரைப்படத்தின் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் மடோனாவை ஆடிஷனுக்கு அழைத்திருக்கிறார்.


பிரேமம் படத்தின் பிரமாண்ட வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் மடோனா செபாஸ்டியன்.


ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மடோனா செபாஸ்டியன்






மடோனா செபாஸ்டியன் நன்றாக பாடக் கூடியவர் என்பது தெரிந்த தகவலாக இருந்தாலும் அவர் பாடி பெரியளவில் ரசிகர்கள் கேட்டதில்லை. ஆனால் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அந்நியன் படத்தின் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலை மிரட்டும் குரலில் பாடி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் அவர். 


அதிர்ஷ்டசாலி


தற்போது மடோனா செபாஸ்டியன் மாதவன் உடன் இணைந்து அதிர்ஷ்டசாலி படத்தில்  நடித்துள்ளார். யாரடி நீ மோகினி , மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இப்படத்தை இயக்கியுள்ளார். சாய் தன்ஷிகா , ராதிகா சரத்குமார் , ஜகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜெய்மோகன் இப்படத்திற்கான கதையை எழுதியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது . விரைவில் இப்படத்தின் அப்டேட் எதிர்பார்க்கலாம்.


மடோனா செபாஸ்டியன் சமூக வலைதளங்களில் பல்வேறு உருவக்கேலி கருத்துக்களை எதிர்கொண்டிருக்கிறார். ஒரு நடிகையாக பல்வேறு இப்படியான சூழ்நிலைகளை பக்குவமாக எதிர்கொண்டும் அதே நேரத்தில் சரியான பதிலடியை கொடுத்து வருகிறார்.




மேலும் படிக்க : Kingdom of the Planet of the Apes Review: சீசர் பெயரை காப்பாற்றியதா? கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்.. விமர்சனம் இதோ..!


The Boy and the Heron Review : தன் கற்பனை கடலில் மூழ்கடிக்கும் மியாசாகி.. The Boy and the Heron பட விமர்சனம்