பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்ஷித் ரூ.48 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


பொதுவாக திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் பல கோடிகளில் வீடுகள் வாங்குவதும், நிலங்கள் உள்ளிட்ட தொழிலில் முதலீடு செய்வது வழக்கம். அந்த வகையில் நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திறமைக்கும் பெயர் போன நடிகை 1980 மற்றும் 1990 ஆண்டுகளில் இந்தி படவுலகில்  கொடிகட்டி பறந்த மாதுரி தீட்ஷித்.  சீனியர் நடிகை என்றில்லாமல் இன்றளவும் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் அவர் நடித்து வருகிறார்.


மாதுரிதான் தற்போது பாலிவுட்டின் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளார். அதற்கு காரணம் அவர் வாங்கியிருக்கும் வீடு. 






முன்னதாக தற்போது மாதம் 12.5 லட்சத்துக்கு சொகுசு வீடு ஒன்றில் 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் வசித்து வரும் மாதுரி தீக்‌ஷித் வீடு ஒன்றை வாங்க முடிவு செய்ததாகவும்,அதற்காக தெற்கு மும்பையின் வோர்லியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அபார்ட்மென்ட்டில் ஒன்றில் வீடு ஒன்றை அவர் விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.






அந்தத் தகவலின்படி, கடந்த செப்டம்பர் மாதம் இதற்கான பத்திரத்தில் கையெழுத்திட்ட அவரின் இந்த வீடு, ஏழு கார் பார்க்கிங் இடங்களுடன் 53 வது மாடியில் 5,384 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் ஒரு பெண் வீடு வாங்குபவராக இருந்தால் முத்திரைத்தாள் வரியில் ஒரு சதவீதம் சலுகை வழங்கப்படும் என்பதால் இதில் ஒரு சதவீதம் சலுகை மாதுரி தீட்ஷித்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


இந்த அபார்ட்மென்ட்டில் பெரிய நீச்சல் குளங்கள், கால்பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, கிளப் மற்றும் பல வசதிகளை அடங்கியுள்ளது. இந்த வீட்டில் இருந்து பார்த்தாலே அரபிக்கடலின் அழகும், ஒட்டுமொத்த மும்பையும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.