தமிழ் சினிமாவில் பார்க்காமல் காதல், பேசாமல் காதல், சொல்லாத காதல் என வெரைட்டி வெரைட்டியாக எத்தனையோ காதல் கதைகளை படங்களாக கொடுத்து இருந்தாலும் காதல் படத்தை ஒரு வித்தியாசமான கோணத்தில் அணுகி அன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் மெஸேஜை காதலர்கள் மத்தியில் அழுத்தமாக பதிய வைத்த திரைப்படம் இயக்குனர் மணிரத்தனத்தின் 'அலைபாயுதே' திரைப்படம். இன்றுடன் இப்படம் வெளியாகி 23 ஆண்டுகளை நிறைவு செய்கிறதா என்றால் மலைப்பாக இருக்கிறது. காலங்கள் எவ்வளவு வேகமாக உருண்டோடுகிறது...


 



மாதவன் - ஷாலினி- அலைபாயுதே


 


அழுத்தமான மெஸேஜ் :


காதலர்கள் வாழ்க்கையில் இணைவது மட்டுமே வெற்றியல்ல. வாழ்க்கையில் இணைந்த பிறகு எத்தனையோ வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள், கோபங்கள், மனக்கசப்பு ஏற்படுவது சகஜம், ஆனால் அவை அனைத்தையும் வலிமையாக எதிர்கொண்டு எந்த அளவிற்கு அவர்கள் காதலுடன் தாக்கு பிடிக்கிறார்களோ அதை பொறுத்தே அவர்களின் வாழ்க்கை இன்பமாகவும், மகிழ்ச்சியாகும் இருக்கும் என்பதை மிகவும் அழுத்தமாக, எமோஷனலாக அலைபாயுதே திரைப்படம் மூலம் பதிய வைத்தவர் மணிரத்னம். 


 



மனைவியுடன் மாதவன்


 


திருமணத்தை மறைக்க மாட்டேன் :



சாக்லேட் பாய் மாதவன் சினிமாவில் அறிமுகமான படம். இப்படத்தில் அவரின் அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் மாதவன். '20 இயர்ஸ் ஆஃப் அலைபாயுதே' நாள் அதை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள். மாதவன் 'அலைபாயுதே' படத்தில் நடிப்பதற்கு முன்னரே திருமணமானவர். ஆனால் பலரும் இதை மீடியாவில் அல்லது வேறு எங்கும் கூறி விடாதீர்கள். பொதுவாக  கல்யாணம் ஆன ஹீரோ என்றால் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைவாக இருக்கும் என பயமுறுத்தினார்கள். அதே போல முதல் முறையாக அவர் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது கேட்ட முதல் கேள்வியும் திருமணம் பற்றி தான். நான் எனக்கு திருமணம் ஆனதை மறைக்க விரும்பவில்லை. நானும் எனது மனைவியும் 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதை வெளிப்படையாக சொல்லாதீர்கள் என்று சொல்லியும் நான் உங்களிடம் உண்மையை சொல்லிவிட்டேன். என்னை நம்பி வந்த பெண்ணை அவமரியாதை செய்ய கூடாது. ஒரு வேளை நான் நடித்த படம் வெற்றிபெற்றால் அந்த சந்தோஷத்தை அவர் என்னுடன் இல்லாமல் தூரத்தில் இருந்து சந்தோஷப்படும் நிலையை நான் அவருக்கு கொடுக்க விரும்பவில்லை. அதனால என்னோட நடிப்பு பிடித்து இருந்தால் புடிச்சிருக்குன்னு சொல்லுங்க. கல்யாணம் முடிந்துவிட்டது என என்னை ஒதுக்கி விடாதீர்கள் என கூறியுள்ளார்.  


மேஜிக் செய்த காட்சி :


சில திரைப்படங்கள் மட்டுமின்றி சில காட்சிகள் காலங்களை கடந்தும் மனங்களில் பதிந்து விடும். படத்தின் பெயர் மறந்து போனாலும் அந்த காட்சிகள் மறக்காது. அது போன்ற காட்சிகளை எடுக்கும் போது அது பிற்காலத்தில் ஒரு நினைவில் நிற்கும் காட்சியாக மாறும் வைப்ஸ் ஏற்படுத்தும் என எடுப்பவர்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. அப்படி ஒரு காட்சி தான் 


"நா உன்ன விரும்பல, உன் மேல ஆசை படல, நீ அழகா இருக்கனு நினைக்கல ஆனால் அது எல்லாம் நடந்துருமோனு பயமா இருக்கு ஷக்தி... யோசிச்சு சொல்லு..." 


 



இந்த காட்சி கடந்த 23 வருடங்களாக மாதவனை துரத்தும் ஒரு காட்சி. இந்த கேள்வியை மாதவன் கூட மணி சாரிடம் கேட்டுள்ளாராம். நீங்கள் எழுதும் போது இது இந்த அளவுக்கு ஹிட்டாகும் என நினைத்தீர்களா என்று. மணிரத்னம் படங்களில் பொதுவாக வசனங்கள் குறைவாக சுருக்கமாகவே இருக்கும். அப்படி இருக்கையில் இது ஒரு பெரிய வசனமாக இருந்தது. 



உண்மையிலேயே அந்த சீன் ரொம்ப பதட்டத்துடன் நடித்த சீன். இரண்டு மணி நேரத்திற்குள் முடித்தாக வேண்டும். ட்ரெயின் போயிடுமோ, சீன் சரியா வருமா, பின்னாடி இருக்கும் ஆர்ட்டிஸ்ட் சரியாக செய்கிறார்களா, இவன் டயலாக் சரியா பேசுறானா என பயத்தில் அப்படியே பிரீயா பேசி முடிச்சுட்டோம். அந்த 2 செகண்ட் காட்சி தான் மேஜிக் செய்துவிட்டது.